பக்கம்:வேனில் விழா.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 தாலி பாக்கியம்

இப்படி வந்து பணம் கேட்கணுமின்னுதானே தெகச்சுப் போயிட்டீங்க. உங்களுக்கு அவரைப்பத்தி ஏதும் தெரி யாதா ? அவர் மனேமிதிச்சு என்னுேட பேசி, மகளை எடுக்கி மாசம் ஒண்ணுக்கு மேலே ஆகுது. பொழுது விடிஞ்சு பொழுதுபோன எந்த நேரமும் அவருக்குச் சீட்டாட்டம்தான் பொழப்பு. குளத்தங்கரைச் சாயாக்கடை தான் அவருக்கு அடைக்கலம். காலம்பற வீட்டுக்கு வந்தப்பப் பிள்ளேக்கு முடியலைன்னு சொன்னேன். அவர் எம்மேலே எரிஞ்சு விழுந்து அஞ்சுரூவா அவசரமா வேணும்னு கேட்டாரு. அந்தப்பணத்தைக் கொண்டாச்சும் ஏதாச்சும் வைத்தியம் செய்யலாம்னு கினைச்சுருந்த என் எண்ணத்திலே மண்ணே வாரிப் போட்டுட்டாரு. பணத்தைக் கைப்பற்றியதுமே மறுபேச்சாடாமல் கிளம்பிட்டாரு. இப்படித்தான் ஒவ்வொரு சமயமும் உயிரைக் கையிலே பிடிச்சுட்டு அவர்கிட்டே கடக்கவேண்டியிருக்குது. குடிகாரன் கணக்காப் பசிச் சப்போ வராரு சாப்பிட்டுட்டுப் போயிடுருரு மேலுக்கு முடியாமக் கிடக்கிற பெத்த மகளைப்பத்திக்கூட அவலே கிடையாது மனிசனுக்கு. அத்தான், உங்க குழந்தை யின் னு கினைத்து மனசு இரங்கி ஒரு அஞ்சுரூவா காசு கொடுத்திங்கன் னு கோடிப் புண்ணியமுண்டுங்க ! ’’

விம்மிப் பெருமூச்செறியச் சொல்லி நிறுத்திய பொன் னுருவி வாய்விட்டு அழுதாள். தங்கவேலுவிற்கும் கண் களில் கண்ணிர் கொட்டியது. கண்ணுககுக் கண்ணுன தன் மகளின் காய்ச்சலைப் பற்றிக்கட்டக் கவலையின்றிச் சீட்டாடியவண்ணமிருக்கும் அவள் கணவன் காசிலிங்கத் தின் பேரில் அவனுக்குக் கரை கடந்த ஆத்திரம் பொங்கி எழுந்தது. அத்துடன் எப்படியாவது அவனே கல்வழிப் படுத்தவேண்டுமென்ற எண்ணம் உதித்தது.

பொன்னுருவிக்குக் கொடுக்கப் பணத்திற்கு எப்படி மால் பணணுவது என்று யோசிக்கையில், சிலநாள் முக்தித் தன் மனைவிக்குச் சேலே வாங்க ஐகது ரூபாய் பணம் கொடுத்து வைத்தது ஞாபகம் வந்தது. -

‘பொன்னுருவி கருக்கல்லே பணத்தைக் கொண் டாந்து தந்து வைத்தியர் கிட்டே யும் சொல்றேன். மனசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/187&oldid=684355" இலிருந்து மீள்விக்கப்பட்டது