பக்கம்:வேனில் விழா.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 18?

கலங்காதே! உன் புருசனும் சீட்டாட்டத்துக்குத் தலை முழுக்குப் போட்டு, கல்லபடியா குணம் திருந்திடுவான். ஆயி கிருபையாலே. கவலைப்படாதே ! ராவிலே புள்ளையைக்

கவனமா பாத்துக்கோ !” என்றான் தங்கவேல்,

“அத்தான் மகமாயி புண்ணியத்திலே உங்களுக்கு ஒரு குறைவும் வராது. உங்களைத்தான் அண்ணைக்கும் கம்பினேன்; இப்பவும் நம்பியிருக்கேன். படபடக்கும் மனசிலே பால்வார்க்கச் செஞ்சிடுங்க. புள்ளே தனியாக் கிடக்கும்...நான் வரட்டுமா அத்தான் ?” என்று விடை பெற்றுச் சென்றாள் பொன்னுருவி. பித்துப்பிடித்தவன் மாதிரி அவள் போன வழிமீது விழி பதித்து நின்றுகொண்டி ருந்தான் தங்கவேல்.

 *

பொன்னுருவியின் வீட்டுக்குப் புறப்பட யத்தனப்பட்டுக் கொண்டிருந்தான் தங்கவேல். உறவு என்ற ஒர்மையில் ஓரளவு பாத்தியதைகொண்ட பொன னு ருவிக்குத் தான் செய்யவிருக்கும் உதவியை நினைத்து அவன் பூரித்துப் போனுன்.

, வள்ளி!” என்று அழைத்த தங்கவேல், இரவு செய்து கொண்ட தீர்மானப் பிரகாரம் வள்ளியிடம் சேலைக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெற எண்ணினன். மறு முறையும் மனைவியை அழைத்துப் பார்த்தான். அவளைக் காணுேம்.

அவசரமாக வெளியே வந்து பார்த்தான். அப்போது தான். காசிலிங்கம்-பொன்னுருவியின் புருஷன், விர்ரென்று விரைந்து சென்றது தெரிக்தது. அவன் வள்ளியிடம் வந்துவிட்டுத்தான் போயிருக்கவேண்டும் என்று ஊகித்த வனுய், வள்ளி, அன்னிக்கு உனக்குப் புடவைக்காகக் கொடுத்த அஞ்சு ரூபாயைக் கொடு. ஒரு அவசர ஜோலிக்கு வேணும். வர்ர சனிக்கிழமை சந்தையிலே உனக்குச் சேலே வாங்கிக் கொடுத்துடறேன்’ என்றான் தங்கவேல். - -- - -

வள்ளி விழித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/188&oldid=684356" இலிருந்து மீள்விக்கப்பட்டது