பக்கம்:வேனில் விழா.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தாலி பாக்கியம்

‘ என்ன வள்ளி வாயடைச்சுப் போய் கிக்கறே ?” * வந்து... அந்தப் பணம் ரெண்டு நாளேக்கு முன்னே காணுமப் போயிடுச்சு-நீங்க...” என்று விழுங்கினுள் கரகரத்த குரலில் வள்ளி.

சற்றுமுன் தன் கண்முன் கண்ட காட்சி அவன் எரிச்ச லுக்கும். ஆத்திரத்துக்கும் தூபமிட்டிது, அந்தச் சூதாடிப் பயலோட இவளுக்கு என்ன பேச்சு ?’ என்று மனத்திற்குள் பொறுமினன் தங்கவேல். அத்துடன் கோபம் தலைக்கேறியது. ருத்திரமூர்த்தியானன்.

பொய்யா சொல்றே பொய் ? என்னே 6rsor sor மூடன்னு மனசிலே கெனச்சுப்பிட்டே?” என்று வள்ளியின் கன்னத்தில் பளிர் என்று அறைந்தான்.

கன்னத்தைத் தடவியவளாய் விம்மினுள் வள்ளி, ‘ என்னே மன்னிச்சுப்பிடுங்க. காசிலிங்கம் அத்தான் வந்து தன் மகளுக்கு ஆகலைன்னு வைத்தியத்துக்கு அஞ்சு ரூவா கேட்டுச்சு. எங்களுக்கு அந்தக் காலத்திலே எவ்வ ளவோ ஒத்தாசை பண்ணியிருந்த அத்தான் இப்படிக் கெஞ்சிக் கேட்கிறப்ப இல்லை'ன்னு சொல்ல எப்படி மனசு வரும் ? எனக்குப் புடவைக்குத் தந்த பணத்தை அப்படியே கொடுத்துட்டேன்...” என்று கூறினுள் வள்ளி.

வாழ்க்கை விசித்திரம் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி யது. தான் செய்த தவறை உணர்ந்தவன் போலத் தன் மனைவியை கோக்கினன். தன் மாமன் மகளுக்கு எப்படித் தான் பணம் கொடுத்துதவ விரும்பினுளுே, அதேபோல் அவளும் தன் அத்தானுக்குச் சமயத்தில் பணம் கொடுத்து ஒத்தாசை செய்ததில் என்ன தவறு இருக்க முடியும்?

‘வள்ளி, கோவப்படாதே! நான்கடிட உன் கிட்டே பணத்தைக் கேட்டது பொன்னுருவி மகள் வைத்தியத்துக் காகத்தான். முன்னுடியே உள்ளத்ைச் சொல்லியிருக்கப் படாதா? காசி உனக்குச் சொந்தமின்னு எனக்குத் தெரி யாதே. ஊம்; பணம் எப்படினுச்சும் அதுகிட்டே போய்ச் சேர்ந்தாச் சரி?

*
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/189&oldid=684357" இலிருந்து மீள்விக்கப்பட்டது