பக்கம்:வேனில் விழா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & வேனில் விழா

அவனையும் அவனுடன் பி. ஏ. என்னும் இரண்டெழுத்துப் பட்டத்தையும் சேர்த்தது. பட்டம் வீசி விளையாடும் பிஞ்சுச் சிறுவனப்போல் அவன் மகிழ்வின் கிழலில் துள்ளிய நாட்கள் எத்தனையோ? அந்த ஆட்டத்திற்கும் பாட்டத்திற் கும் ஓர் அர்த்தம் இருக்கும் இரகசியத்தை அறியும் வாய்ப்பு பெற்றவளுக்குக் கிட்டத்தான் செய்தது. பாவையின் கதையைக் கேட்டாள்; பூவையின் தந்தையின் படத்தையும் பார்த்தாள். வரவிருக்கின்ற மருமகள், தன்னை ஏய்த்தவ னின் அருமந்த புதல்வியாக இருப்பாளென்று அவள் எங்ங னம் எதிர்நோக்கி யிருக்கக்கட்டும்?

வேலை ஏற்க ரெயில் ஏறிஞன் மகன்.

அவனை அனுப்பிய மறுவாரம், அவனுக்கு ஆணை’ ஒன்றையும் அனுப்பினுள் தாய்!

சாரங்கராஜன் தட்சணமே திலகவதியை மறந்துவிட வேண்டுமாம்!...

 * தல விரித்தாடிய வஞ்ச உணர்ச்சி, பொங்கிப் பிர வகித்து ஓடிய புத்திர வாஞ்சையை ஜீரணிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தது!

கங்குலும் ஆந்தையும் அந்தரங்கம் பேசுகின்ற கேரம். இன்னமும் அலமேலு அம்மாள் தூங்கவில்லை. மலை யெனக் கனத்துக் கிடந்த கபால வெளியின் அழுத்தத் திற்கு இடைவேளை அமைதியேனும் கிட்டாதா என்று ஏங்கித் துவண்ட சமயத்தில், ஏதோ ஒரு கினைவுத் துணுக்கு, உடைந்த ஒட்டாஞ்சல்லியாக நெஞ்சத்தைக் குத்திற்று. - - - - - பிஞ்சுப் பிராயத்தின் அமுதமான இளங்காலே. ஆலமேலு அன்றைய வகுப்புப்பாடத்தை சிலேட்டில் எழுதக குச்சியைத் தேடினுள். புத்தகப் பையில் இல்லை. கடைசியில் அவள் தன் சிலேட்டுக் குச்சியை நடராஜ னுடைய சட்டைப் பையில் கண்டெடுத்தாள். முன்னுடி, கரன் கேட்டதுக்கு, எடுக்கலன்னு பொய்ச் சத்தியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/19&oldid=684358" இலிருந்து மீள்விக்கப்பட்டது