பக்கம்:வேனில் விழா.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 189

மறுநாள் மாலை பொன்னுருவியின் வீட்டையடைந்ததும் அங்கு நிலவிய அசாதாரண அமைதியைக் கண்டு ஒரு கணம் திடுக்கிட்டான் தங்கவேல். பிள்ளைக்கு என்னவோ ஏதோ என்று பதறினன். ‘பொன்னுருவி மகளுக்கு ஆத்தா கருணையாலே ஏதும் நேர்ந்திடப்படாது,” என்று பிரார்த்தித்துக்கொண்டே, அவன் உள்ளே நுழைந்தான்.

‘அத்தான், உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டி ருங்தேன். குழந்தைக்கு ராத்திரி காச்சல் நெருப்பாயிருங் துச்சு. ராத்திரி பூராவும் சொரணை கூடக் கிடையாது மகளுக்கு ‘

‘பொன்னுருவி, எங்கே உன் புருஷன் காசிலிங்கம்? அவன் கிட்டே என் பெண் சாதி அஞ்சு ரூவா கொடுத்துச் சாமே. மகளுக்கு வைத்தியத்துக்கு வேணுமின்னுளும். அத்தானுச்சேன்னு இரக்கப்பட்டு பணத்தைக் காலம்பறவே கொடுத்தாச்சாமே !’

“அத்தான், அதிசயமால்ல இருக்குது எம் புருஷனை காலையிலேயிருந்து கண்ணுப் புறத்தாலே கட்ட காணலேயே! ஐயையோ, பொய்சொல்லி மறுபடியும் பணத்தை வச்சுச் சூதாடியிருக்கும் !” என்று சொல்லித் துடித்தாள் பேதை.

காசிலிங்கத்தின் தந்திரத்தால், சீட்டாட்டத்தில்தான் விரயமடைந்திருக்கவேண்டும் அவனிடம் கொடுத்திருந்த ரூபாய் ஐந்தும் என்று ஊகித்துக்கொண்டான் தங்கவேல். மேலும் காலத்தைப் போக்க எண்ணுமல் ஓடிப்போய் வைத்தியரை அழைத்து வந்து காண்பித்தான். கேட்கும் பணத்தைத் தான் தருவதாகப் பொறுப்பு ஏற்றுக்கொண் டான். வேறு வழி ?

குழந்தையின் ஆயுசுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாது என்று உறுதி கொடுத்தார் வைத்தியர், காடியைப் பரிசோதித்தபின். சூரணம் ஒன்றைத் தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுக்கவே அது மெதுவாகக் கண்களைத் திறந்து விழித்தது. சந்தோஷ மிகுதியில் பொன்னுருவிக்குத் தலைகால் புரியவில்லை. -

ஆளுல் மறுகணம் அவளது ஆனந்தம் அழுகையாக மாறியது. தான் பார்த்த காட்சியைக் கண்டு அலறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/190&oldid=684359" இலிருந்து மீள்விக்கப்பட்டது