பக்கம்:வேனில் விழா.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 90 தாலி பாக்கியம்

விட்டாள் பொன்னுருவி. இடுக்கியில் அகப்பட்ட மீன் போலத் துடிதுடித்துப்போளுள். ஏனென் ருல், போலீஸ் காரன் ஒருவன் பின்தொடர வந்து கின்றான் அவளது

கணவன் காசிலிங்கம்.

‘ஊம், ஜல்தி பண்ணு, ஸ்டேஷனுக்குப் புறப்படனும் !” என்று அதட்டினன் தாணுக்காரன்!

சீட்டு விளையாட்டின் விளைவே இந்த இக்கட்டான நிலைக்கு, போலீஸ் கையில் சிக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது என்பது புலனுயிற்று பொன்னுருவிக்கு.

‘இருங்க ஐயா, உடம்பு காயலாகக் கிடக்கும் என் மகளே ஒரே ஒரு தரம் மாத்திரம் பார்த்துட்டு வந்துடறேன்!” என்று கெஞ்சினுன் காசிலிங்கம்.

போலீஸ்கார ஐயா, இந்தத் தடவை மட்டும் அவரை மன்னிச்சிடுங்க பெரிய மனசு பண்ணி. இனிச் சீட்டைக் கண்ணுலே கூடக் காண மாட்டாது காசிலிங்கம். அதுக்கு நான் ஜாமீன்!” என்று அழுத்தமாகக் கடறிய தங்கவேல், காசிலிங்கத்தையும் போலீஸ்காரனையும் மாறி மாறிப் பார்த் தான். முறுவல் பூத்தது இதழ் ஓரத்தில், பொன்னுருவியின் கண்களில் கண்ணிர் நிறைந்து வழிந்தோடிக்கொண்டிருக் தது. ஆல்ை, போலீசைக் கொண்டு காசிலிங்கத்தை மிரட்டி வைத்தால்தான் ஒரு வழியாகச் சீட்டாட்டத்தை நாடமாட்டான் என்பதை உணர்ந்துகொண்டு, தங்கவேல் தான் இப்படிப்பட்ட நாடகத்தை நடத்தியிருக்கிருன் என்ற ரகசியம் பொன்னுருவிக்கோ அல்லது காசிலிங்கத்திற்கோ எப்படித் தெரிந்திருக்க முடியும்?

மறுபேச்சின்றி தாணுக்காரன் போய்விட்டான். பொன்னுருவி கண்ணிரைத் துடைத்துக்கொண்டு கிம்மதி யடைந்தாள். மறுபிறவி எடுத்தவன் போல, ஒரே எட்டில் பாய்ந்து தன் குழந்தையை வாரியெடுத்து மடியில் வைத்த

ணம் தேம்பினுன் காசிலிங்கம்.

பொன்னுருவி, இந்த மட்டும் ஆயா கண் திறந்திச்சே, வ நம்ப செஞ்ச பாக்கியம்தான். தலைக்கு வந்தது ாகையோடு போனது மாதிரி, போலீசு கையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/191&oldid=684360" இலிருந்து மீள்விக்கப்பட்டது