பக்கம்:வேனில் விழா.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 191

சிக்காமல் தப்பிச்சிட்டேன். தங்கவேலை உசிருள்ள வரை மறக்க முடியுமா? பொன்னுருவி, நீ என்னே மன்னிச்சுடு! குடிகாரன் கணக்காக உன் கழுத்துத் தாலியைக் கூட அறுத்திட்டுப் போய்க் கடைசியா ராத்திரி அதையும் தோத்துப்பிட்டேன். காலம்பற வள்ளிகிட்டப் போய், மக ளுக்கு வைத்தியத்துக்கின்னு பொய் சொல்லி அஞ்சு ரூபாவை வாங்கிச் சீட்டாடினேன். கடைசியா எனக்குக் கெலிப்பு வந்துச்சு. பணம் கொஞ்சம் கைக்கு வந்ததும் அந்தத் தாலியையும் திருப்பிட்டேன்!” என்று உணர்ச்சி மேலிடக் கூறி, துணியில் முடிந்து வைத்திருந்த தாலியைக் கொடுத்தான் தன் மனைவியிடம்,

இதைக் கேட்டதும் தங்கவேல், பொன்னுருவியின் கழுத்தைப் பார்த்தான். மங்கலச் சின்னம் பரிமளிக்க வேண்டிய கழுத்து சூனியமாகத் தோற்றமளித்தது. தங்க வேல் கற்சிலையாய்ச் சமைந்து கின்றான் தன் கணவனின் இஷ்டம் நிறைவேறி விட்டால் அதுவே போதும் என்ற கொள்கையுடைய பொன்னுருவியின் மனப்போக்கை கினைத்து மலைத்தான் அவன். அதே தருணம் காசிலிங்கத் தின் அடாத செயலேக் கண்டு பொருமியது அவன் உள்ளம். என்றாலும், இனியாவது அவன் வாழ்க்கைச் சுவடியில் புது ஏடு புரட்டப் பெற்று, பொன்னுருவி, குழந்தை சகிதம் இன்ப வாழ்வு தொடங்குவாள்ல்லவா என்ற எண்ணம் உதித்தது. உடனே அவனுக்கு கிற்கிருேமா, அல்லது பறக்கிருேமா என்ற சந்தேகம் உண்டாகி விட்டது. அவ்வளவு மகிழ்ச்சி.

‘பொன்னுருவி, இனிக் கவலைப்படாதே! காசி மச்சான் திருந்திடுச்சி. எல்லாம் மகமாயி கடாட்சந்தான். அத் தோட மலைபோல வந்ததெல்லாம் பனி போல மாறினதும் உன் தாலி பாக்கியம்தான்!” என்று கனிவுடன் வார்த்தை கள் உதிர்த்தான் தங்கவேல்.

நன்றி நிறைந்த பார்வையுடன் தன் அத்தான் ஏறிட்டு. விழித்த வண்ணம், கையில் வைத்திருந்த தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, கழுத்தில் அணிந்து கொண்டாள் அவள். மறுமலர்ச்சி பெற்ற பொன்னுருவியின்

வதனத்தில் புது வாழ்வின் பூரிப்பு வலை பின்னியிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/192&oldid=684361" இலிருந்து மீள்விக்கப்பட்டது