பக்கம்:வேனில் விழா.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று நேற்று வந்த சொந்தமா?

‘துத்துக்குடி எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரெயில் நிலையத்தில் வந்து ஓய்வு பெற்றதுதான் தாமதம், கையில் பிடித்திருந்த தோல் பெட்டியுடன் கீழே இறங்கின்ை தங்கப்பன். பெட்டி யைத் தரையில் வைத்தான். ரெயில் பெட்டியினின்றும் கீழே இறங்க வழிபார்த்துக்கொண்டிருந்த தன்னுடைய அன்னையைக் கைகளைப் பற்றிய வண்ணம் கீழ்த்தளத்திற் குப் பதமாகக் கொண்டுவந்து சேர்த்தான் அவன்; சாமான் களுக்குத் தாயைக் காவல் வைத்தான்; வாடகைக் காருக்கு வகை செய்யலாளுன். ஜார்ஜ் டவுனில் ராமசாமித் தெரு வுக்கு வந்ததும்தான், தங்கப்பனுக்கு நல்ல மூச்சுப் பிரிந்தது. வாடகைப் பணத்தை மீட்டர் பார்த்து நீட்டினன். பிறகு பெட்டியும் கையுமாக, தாயுடன் வீட்டினுள் நுழைந்தான் அவன். வீடு என்றால் வாடகை வீடு!

“என்ன அம்மா, பெண் பார்ககப் போன காரியம் சித்திதானே?...” என்று வினவினர் குடித்தனக்காரர்கள் சிலர். ‘ம்’ என்று வெய்துயிர்ப்பைப் பதிலாக்கிச் சுளித் துக் கொண்டே, வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென் ருள் மரகதத்தம்மாள். .

‘தம்பி, நீ போய்க் குளிச்சிட்டு ஓடியாப்பா!’

தங்கப்பன் குளித்துத் திரும்பின்ை. பக்கத்து வீட்டுப் பையன் டிபன் வாங்கி வந்தான். புதுத் துணிமணிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/193&oldid=684362" இலிருந்து மீள்விக்கப்பட்டது