பக்கம்:வேனில் விழா.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இன்று நேற்று வந்த சொந்தமா ?

நயன வட்டங்களை விட்டுப் பறந்து செல்லக் கூடாது என்று அவன் தன் விழிகளை அவ்வாறு மூடிக்கொண்டான? அவன் மறுகணம் விழிகளேத் திறந்த தருணம் இதயத்தின் அடித் தளம் விட்ட ஆத்திரப் பெருமூச்சு வெளிக் கிளம்பிற்று. ஏன், அந்த அழகுப் பசுங்கிளி சிறகடித்துப் பறந்து விட்டதா?

சாங்தினி!’

தீக்குச்சியும் தீப்பெட்டியும் இதயம் பிணையச் சக்திக் கும்போது, எரி நெருப்பு உருவைக் காட்டுவது இயற்கை தானே? அவனுள் தீ எரிந்தது. சாந்தினி என்னும் அந்த ஒரு பெயர் ஓராயிரம் பெயர்களாகப் பெருகி அவனது கெஞ் சில் தீயை வளர்த்தன. தங்கப்பன் துடித்தான்; துவண் டான். தீ சுடாதா? முட்டப் பெருகிக் கரை புரண்டது வெள்ளம்.

‘தம்பி, சாப்பிடுப்பா"!

அவன் மனம் திருச்சி மலைக்கோட்டையில் சஞ்சரித் துக்கொண்டிருந்ததால், சென்னையின் நினைவு எழவில்லை.

‘தங்கப்பா!... தம்பி தங்கப்பா!’

பெற்ற பாசம் உற்ற அன்புடன் தட்டிக் கூப்பிட்டது. தொண்டைக் குழியில் வேதனை புறப்படும்வரை, வாய் ஓயாமல் கூவி அழைத்த பலகாரத் தட்டு, அவனது பரி தாபக் கோலம் கண்டு கிலே கலங்கியது.

‘அம்மா!”

மகன் வடித்த சுடுநீர் பெற்றவளின் மாணிக்கக் கையில் தெறித்தது.

‘தம்பி, கெருப்பு சூடுதான்; ஆளுலும் சுடு தண்ணி அதை அவிச்சுப்பிடும்; இல்லையா?... அதே போல, உன் னுேட இந்தச் சூடான கண்ணிர் உன் மனசிலே எரிகிற நெருப்பை அணேச்சுப்பிடும், தம்பி!... மலைக்கோட்டைப் பிள்ளையாரும் நம்ம பிரஹதம்பாள் அம்மனும் கல்ல முடிவைக் காட்டாம இருக்க மாட்டாங்க. சரி, நீ இப்ப பலகாரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/195&oldid=684364" இலிருந்து மீள்விக்கப்பட்டது