பக்கம்:வேனில் விழா.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I95

சாப்பிட்டுப்பிட்டு, வேலைக்குப் புறப்பட்டுப்போ. இந்தச் சனியனை மூடிப்பிட்டு எழுந்திரு’

தங்கப்பனின் கையில் முகவரிச் சீட்டு ஒன்று தட்டுப் பட்டது. எம். நாகநாதன் என்ற பெயருக்கு அடியில் அலு வலகம், வீடு ஆகிய இரண்டின் முகவரிகளும் அச்சடிக்கப் பெற்றிருந்த ன. கண்களைத் துடைத்த வண்ணம், கை மாறிய” அந்தப் பெட்டியை துழாவிய வேளையில், புதிய தொரு கிழற்படம் ஒன்று அவனுக்குரிய கைவிரல்களில் சிக்கியது.

‘விலாசினி அல்லவா இவள்? இவளுடைய படம் இவன்

பெட்டியில் எப்படி வந்தது?

சிந்தாதிரிப் பேட்டையில் பஸ்ஸிலிருந்து இறங்கின்ை தங்கப்பன். அவனுடைய கையில் அந்தத் தோற்பெட்டி இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஒன்றை அமர்த்திச் சென்று கொண்டிருந்தான் அவன். குறுக்கோடிய தெருக்களை யெல்லாம் காலால் ஏற்றிவிட்டு சைக்கிள் ரிக்ஷாக்காரன் பறந்தான். ஆனல் தங்கப்பனுக்கோ தன் வழியில் குறுக் கிட்டுப் பாய்ந்த நினைவுகளே சற்றே விலகியிருர், பிள்ளாய்!” என்று பணித்து, அல்லது வேண்டி, வழி விலக்கிச் செல் லும் மார்க்கம் புலன்களில் ஒட்டவில்லை!

‘காந்தினி!’

தங்கப்பன் ஏன் அவளை அழைத்தான்? மலைக்கோட் டைப் பதுமையை அவன் ஏன் கூவிக் கடிப்பிட வேண்டும்? அவன் என்ன செய்வான்? பாவம், காலமும் கனவும் அவ னுக்கு விடுகதைகள் போட்டு விட்டனவே?

நான் என்ன செய்யட்டும் அக்கா? நம்ம சாந்தினியை கம்ம தங்கப்பனுக்குக் கொடுக்க வேணும்னுதான் கினைச்சுக் கிட்டிருந்தேன்; ஆளுல்,"லவிதம்’ வேறு மாதிரியாக விதித்து விட்டதே? சாந்தினி - தங்கப்பன் ஜாதகங்கள் சரிவரப் பொருங்தவில்லை, அக்கா!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/196&oldid=684365" இலிருந்து மீள்விக்கப்பட்டது