பக்கம்:வேனில் விழா.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இன்று நேற்று வந்த சொந்தமா?

அப்பாவின் தொடர்பு ஏற்பட்டதும், என்னையே மாப்பிள்ளை யாக்கிக்கொள்ள முடிவுகட்டிவிட்டார். பெண்ணைப் பார்க்க திருச்சி சென்று திரும்பும்போதுதான், கம் பெட்டிகள் இடம் மாறி, கைமாறிவிட்டன. “

நாகநாதன் கைப்பிடித் துண்டை எடுத்து நெற்றியில் ஒற்றினுன். அந்த இடத்தில் செம்மை படர்ந்தது. சுருள் முடியை அலட்சியத்தோடு ஒதுக்கிவிட்டான் அவன்.

தங்கப்பனின் இதயம் அழுதத, கண் ணிரை உண்டு விழுங்கினுன் அவன். பாவி என் கனவைச் சிதைத்து விட்டானே காலன் காகநாதன்? எவ்வளவு பெருமை தவழப் பேசுகிருன்! பேசுவதற்கு என்ன? தேவதையெனத் தோன் றும் சாந்தினி கிடைத்து விட்டாள் அல்லவா? ஏன் பேச மாட்டான்?’

‘நான் போய் வருகிறேன்!”

‘இருங்கள், காப்பி சாப்பிட்டுப் போய் வாருங்கள்! அழைப்பு அனுப்புகிறேன்; கலியாணத்துக்கு அவசியம் வந்துவிட வேண்டும்!”

‘ஆஹா!’

சமையற்காரனுக்கு வாயெல்லாம் பல்.

‘ஆகட்டுங்க; நிச்சயம் வருகிறேன்!” என்று விடை பெற்றுத் திரும்புகையில், தங்கப்பன் “வணக்கம் ஸார்!’ என்ற குரல் கேட்டுத் தலையை நிமிர்த்தினன். இடது கையில் பிடித்திருந்த பெட்டி கடுங்கியது. வணக்கம்!”

வந்து கின்ற பெரிய காரிலிருந்து விலாஸினி இறங்கி கின்றாள்.

கோன் போய் வருகிறேன், விலாசினி’ என்று புறப் பட்டான் தங்கப்பன். ‘என் ஸ்டுடின்ட் விலாசினி!’ -

  கல்லூரி உத்தியோகத்திற்கு உண்டான உடைகளைக்

கழற்றி விட்டு, தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் தங்கப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/199&oldid=684368" இலிருந்து மீள்விக்கப்பட்டது