பக்கம்:வேனில் விழா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 19.

பண்ணினியே?...இப்ப அது...இந்தாப்பாரு, உஞ் சட்டைக் குள்ளே கிடக்குதாக்கும்?’ என்று ஆத்திரம் கக்கினுள். தான் எடுக்கவில்லையென எவ்வளவோ மன்றாடியும், அவள் கேட்கவில்லை. அத்துடன் கின் ருளா? அவனுடன் பேசா மல் டு இட்டு விட்டாள். அவன் பாவம், அழுதழுது முகம் வீங்கிப் போனன். கடைசியில் மறுதினம், எதிர்வீட்டுப் பையன் ஓடிவந்து “...அலமு, உன் அத்தான் கல்லவன். தப்பு எம்மேலேதான். நான்தான் உங்குச்சியை எடுத்துப் போய்ப் பாடம் எழுதினேன். திருப்பிக் கொண்டாரப்ப நீ வாசலிலே விளையாடிக்கிட்டிருந்தே! ஆனதாலே, யாருக்கும் தெரியாம அதை நடராஜன் சொக்காயிலே போட்டுப்பிட்டு. ஓடிப்பிட்டேன்!’ என்று செருமினன். பார்த்தியா, பார்த் தியா? இப்பத்தானே உண்மை உனக்குப் புரியுது?... என்ன ஆணுலும், நீ ரொம்ப மோசம்...உனக்கு வீம்பு ரொம்ப... எதையும் லேசிலே கம்பவே மாட்டே!...” என்று தேம்பினுன் நடராஜன்!

காலத்தின் புதை மணலில் அழுந்திக் கிடந்த இக் நிகழ்ச்சி ஏன் இப்போது விசுவரூபம் எடுக்க வேண்டும்?

ஊம், அதை அவள் ஏன் நினைத்தாள்?

வெறி முட்டிய அதிவேகத்துடன் படுக்கையைவிட்டு எழுந்து இறங்கி கடந்தாள் அலமேலு அம்மாள். கால்கள் பூமியில் பாவவில்லை. அச்சம் அச்சுறுத்தியது. கடை விளக்கைப் போட்டாள். ஆறி அவலாகப் போயிருந்த சாப்பாட்டுப் பாத்திரம் அப்படியே இருந்தது. அருகே, கையில் தலைவைத்துப் படுத்துக் கிடந்தாள் வேலைக்காரி. ‘அம்மா...நான் சொல்றேனேன்னு கோவிச்சுக்கிட மாட்டிங் களே?...உங்களே அந்த ஆம்பிள்ளே ஏமாத்தினர் என்கிற துக்காக, பாவம், மனசு ஒத்துப்போன சின்னஞ் சிறுசுகளை நீங்க ஏமாத்துகிறது தருமமா, அம்மா! என்று வேலைக்காரி ‘ஹிதோபதேசம்’ செய்யப்போக, அவள் கன்னம் பழுத்தது. தான் கண்ட் பலன்! - - -

அலமேலு அம்மாளே இனம் பகுக்கமுடியாத வேத னேக் குமைச்சல் வாட்டி வளைவெடுத்தது. கடந்தாள். சாரங்கராஜனின் கடிதம் காட்சி தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/20&oldid=684369" இலிருந்து மீள்விக்கப்பட்டது