பக்கம்:வேனில் விழா.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இன்று நேற்று வந்த சொந்தமா ?

அதிகாலையில், சோமசேகரனேக் கண்ட மரகதத்தம்மா ளுக்கு ஒருபுறம் ஆச்சரியமும், மறுபக்கம் ஆத்திரமும் ஏற் படலாயின.

‘வா!” என்று கூட வரவேற்புக் கூருமல் கின்ற அவ ளிடம் திருமண அழைப்பு ஒன்றைக் கொடுத்தார் சோம சேகரன் .

‘அக்கா, இந் ப் புகைப் படத்தை நான் பார்க்காமல் இருந்திருந்தால், நான் உடன்பிறந்த பாசத்துக்கே நன்றி செலுத்தாதவனகி பிருப்பேன். என் கண்களைத் திறந்து விட்ட இப்படத்தை நான் எப்போதும் மறக்கவே முடியாது அக்கா!’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் சோம சேகரன்.

அப்பொழுது, குளித்து முடித்துத் திரும்பிய தங்கப்பன், தன் மாமா ஏந்தியிருந்த அந்தப் படத்தை நோக்கினன். அவனைத் திகைப்புணர்வு ஆட்கொண்டது. சோமசேகர னும் மரகதத்தம்மாளும் பிஞ்சுப் பிராயத்தினராகக் காட்சி தந்தார்கள்!

‘அம்மா தன் தம்பிக்கு இந்தப் படத்தைத் தபாலிலே அனுப்பி வைக்கச் சொல்லி, எதிர்வீட்டுப் பையனிடம் கொடுத்தார்கள். இதைப் பார்த்தாவது, தன் தம்பியின் மனம் மாறி, உடன் பிறப்பின் மகிமையை எண்ண வழி பிறக்கும் என்பது அம்மாவின் உள்ளக் கருத்து. ஆனல், நானே, அந்தப் போட்டோவை அனுப்பச் செய்யாமல், அதை ரகசியமாக வாங்கி என் பெட்டியடியில் வைத்துக் கொண்டு விட்டேனே? .. பின், இந்தப் படம் எப்படி மாமா வுக்குக் கிடைத்தது?’ என்று மனம் மறுகினன் தங்கப்பன். ‘உனக்குப் பணக்காரச் சம்பந்தி கிடைச்ச பெருமை யைச் சொல்லிட்டுப் போக வந்தியே, அது மட்டும் கல்லது தான்!” என்று அர்த்தம் அமைத்துப் பேசினுள் மரகதத் தமமாள.

“அக்கா, என்ன மன்னிச்சுப்பிடு. கம்ம சாங்தினிதான் இப்படத்தை வீட்டுச் சுவரிலேயிருந்து எடுத்து எங்கிட்டே காட்டிச்சுது!’ என்று திணறிஞர் சோமசேகரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/201&oldid=684371" இலிருந்து மீள்விக்கப்பட்டது