பக்கம்:வேனில் விழா.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 20

‘தம்பி, உட்கார். நீ உன்னுேட ஏழை அக்காவை மறந்தாலும், நான் என்னுேட பணக்காரத் தம்பியை மறக்க முடியுமா? நானும் என் மகனும் உன் மகள் கல்யாணத் துக்குக் கட்டாயம் வாரோம்!” என்றாள். அவள் குரல் தடு

மாறியது.

‘அக்கா, முதலிலே இந்தக் கல்யாணப் பத்திரிகையைப் பாரேன்!’’

அழைப்பில் இருந்த பெயர்கள்: மணமகன் : தங்கப்பன்.

மணமகள்: சாந்தினி.

  திங்கப்பனின் பழைய நாட்குறிப்பு ஏடு புரண்டது

‘சாத்தினி என் நெஞ்சில் நீ என்றென்றுமே பிஞ்சுப் பிராயத்துச் சாந்தினியாகவே வாழ்ந்திடுவாய்! உன் அழகுக்கு என்னைப் பிஜின்’ வைக்க விதி ஒப்பவில்லை. ஆனுலும், உன்னே மறக்கவேண்டிய கட்டம் வந்தால், எனக்குக் கட்டாயம் பைத்தியம்தான் பிடிக்கும். சாந்தினி, நீ பாக்கியவதி என்னைக் காட்டிலும் சகல விதத்திலும் சிறந்தவர் ஒருவர் உனக்குக் கணவராய் வரப்போகிரும். நீ வாழ்!

கடந்து முடிந்தது பூராவையும் களுப்போன்றே அவன் உணரவேண்டியவன் ஆன்ை. விரல்வழி வழிந்த தேன் வாய்க்குத்திரும்பினுற்போல, இந்தத் திருப்பம் அவனுக்கு இனித்தது!

இப்பொழுது, தங்கப்பனின் மனம் விம்மிக் கண்ணிர்

வடித்துப் புலம்பியது: “சாந்தினி, உன்னுடைய தியாகம் பெரிது! இன்று நேற்று வந்ததா நம் சொந்தம்?”


ஏகப்பட்ட தம்ளர்கள் உடைபட்டன!

தங்கப்பன் விழிமலர்ந்தான்; வாய்ச் சிரிப்பு ஏடு திரிந்தது. அவன் மீண்டும் சிரித்தான்! -

$ -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/202&oldid=684372" இலிருந்து மீள்விக்கப்பட்டது