பக்கம்:வேனில் விழா.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 207

கொடுத்துத் தட்டி கோடாலி முடிச்சுப் போட்டு முடிந்து விட்டு, வெற்றிலை குட்டானைக் கைப்பற்றி ஒரு வாட்டி’க்கு வாய்க்கு வெற்றிலே தரித்துக்கொண்டு ஊர்ப் பஞ்சாயம் பேச உதடுகளே அசைத்துவிட்டால் போதும், எந்தச் சிக்க லும் விரல் சொடுக்குவதற்குள் தீர்வு கண்டுவிடும்...!

அவ்வளவு தூரத்திற்குக் கியாதியும் கேர்மையும் கண் டிப்பும் கார்வாரும் படைத்த சோ வைக்கு இப்பொழுது சோதனை முளைத்து விட்டதோ? சோதனையாகி விட்டாளோ பொம்மி!

பொம்மி கன்னிச்சிரிப்பின் மதமதப்புடன் தான் நின்றாள். ஆனல் அவளது அகன்ற கண்களின் வெஞ்சினம் தணிய வில்லையே!

பொம்மி...” என்றார் சேர்வைகாரர்.

கூப்பிடு தொலைவில் கைகட்டி நின்ற பொம்மி, விதியின் கண்ணுக்குத் தெரியாத சூட்சுமத்தைப்போல, கடந்துவந்து, கும்பிடுபோட்டு, ‘தண்டனுங்க ஐயா!’ என்றாள்.

‘மூக்கா!” என்றார் சேர்வைகாரர்.

கிழக்குப் பாரிசத்தில் கூடிக் கிடந்த கூட்டத்தை எட்டி விலகி நடந்து வந்தான் அவன். சேக்கு கலந்திருந்தது. முதல் போகத்தில் வயல் வரப்பில் தலை சாய்ந்திட நேரம் பார்த்திருக்கும் சீரகச் சம்பாத் தளைக்கட்டுப் போன்று அவன் முகம் கீழே தாழ்ந்தது. உச்சி வெய்யில் சூட்டில் இளக்கம் கண்டு முத்துக் கோர்த்திருந்த வேர்வை மணிகள் கறுத்துக் கொழித்த மார்புப் புறத்தை அணைந்திருந்தன. இடுப்பில் கட்டியிருந்த துவாலேயை நெருடின அவன் விரல் கள். , , : . ‘

மூக்கன் கின்றான்.

பொம்மி நின்றாள்.

இருவரும் தலைகுனிந்தவாறு ஒருசில கணங்கள் கின்றார்கள்.

குப்பத்தில் கள்ளிச் செடிப் பத்தை மருங்கில் அழகும் அழகும் களியாட, அன்பும் அன்பும் அரவணைக்க, காலத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/208&oldid=684378" இலிருந்து மீள்விக்கப்பட்டது