பக்கம்:வேனில் விழா.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பொம்மித்தி

தையும்.கனவையும் கழற்சிக்"காய்களாக்கிச் சிரித்து மகிழ ஆடிப்பாடி விளையாடிய நாட்களை எண்ணிஞர்களா?

செல்லத்தேவன் குட்டை ஓரத்தில் ஆவாரம்.சுப்பி பொறுக்கிய கூடையை அவள் சும்மாடு கட்டிச் சுமந்து, அந்த அயர்வில் கச்சை நெகிழ, அவள் ஒயிலோட, மயி லாட, கடந்து வரும்போது, அவன் மனம்கெகிழ, மயல் விழிக்க, அருள்கொழிக்க, கள்ளவிழி வீசிப்பார்த்து மயக்கம் கண்டானே, அந்த ஒரு தொடக்கப் புள்ளியில் மறுபடியும் அவர்கள் தனித்தனிப் பான்மை கொண்டு போய் கின்றார் களோ?

அசல் குப்பத்துப்பிள்ளை நம்ம சேசிய மிதிச்சு, கம்ம குட்டி பொம்மியைச் சொக்குப்பொடி போட்டு வசப்படுத்திக் கிடுச்சே! மெய்யாகவே அதிசயங்தான் இது!...பாவம், நம்ம சேரி வயசுப் புள்ளேக வாயில ககத்தைவச்சுச் சப்பிக் கிட்டிருக்குதுக!... எதுக்கும் பொசுப்பு வேணுமா?... நெச மாகவே, அது. அந்த மூக்கன்... பறைப்புள்ளேயாவே தோனலே . ரொம்ப சொரத்துத்தான் வாரத்துக்குச் சேவகம் பண்ணி உழுத ஆண்டான் கிட்டவே வம்புபேசி நாலு மாகாணிகரைக்குக் குடிக்காணியாச்சி பாத்தியம் கொண்டாடிப் புடுச்சாமே!... அக்கரைச் சீமைக் காசுவேற பசையா இருக்காம்!...ரெண்டும் வசமான சோடிதான்!” என்று ஊர் வாய் முணுமுணுத்ததே, அந்த முணுமுணுப்பு இப்போது தடம்மாறிவிட்டதென்ற மனச சள்ளேயில் சுழன் ருர்களா அவர்கள் ?

“மூக்கா’ என்று அலட்டினர்.

gor S!??

“இப்ப ஒம்மேல வம்பு தொடுத்து இருக்குது பொம்மி. உனக்குப் பொம்மி முக்தானே விரிச்சு வாக்கப்படுறதுக்கு முகவர்த்தம் வச்சிக்கிற நேரத்தில், நீ இப்படி எத்துக் கொத்தா கடந்துகிட்ட போக்கு தப்புத்தான்!...’

நிறுத்தினர் சேர்வைகாரர்.

நிறுத்தப்பட்டுவிடுமா கதை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/209&oldid=684379" இலிருந்து மீள்விக்கப்பட்டது