பக்கம்:வேனில் விழா.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 209

கடந்த கதை இதுதான்...

மூக்கனும் பொம்மியும் புருஷன் பெண் சாதி ஆக வேளே கணிக்கப்பட்டது. இக் கிலேயிலே, கேற்று அக்தி மாலைப்பொழுதில் பொம்மி குட்டையில் குளித்துத் திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது இளமையின் அடக்கத்திற்கு மீறிய பாவனையில் ஈரத்துணியையும் கட்டறுத்துக்கொண்டு முட்டி கின்றன, அழகின் மையப்புள்ளிகள். இக்காட்சியில் காமம் தலைக்கேற, கொன்றைப் பத்தையில் ஒளிந்து கின்று கொண்டிருந்த மூக்கன், அ வ் வழி யே குறுக்திட்ட பொம்மியை அப்படியே கெஞ்சாரத் தழுவி... அப்படியே... ஆஹா!...

தீயான பொம்மி சினம் ஏற, வெஞ்சினம் ஏற்றம் புரிய, அவனேவிட்டுத் திமிறியவளாக விடுபட்டு, விரைத்திருந்த கைகளால் மாறிமாறி அவன் கன்னத்தில் அறைந்தாள். தென்றலாக வந்தவள், வளியாகத் திரும்பிய தருணம் ஒரு மறைவிடம் துறந்து தன்னைக் கண்ணி வைத்த)ப் பிடிக்க மனப்பால் குடித்திருந்த காளியப்பன் வெளியேறிய காட்சியைக் கண்டாள். “துவே!” என்று உமிழ்ந்து கடந்தாள். “பொம்மி!... எம்புட்டு சொத்து நீயிங்கற சொந்தத்தில்தான் கானு அப்படிச் செஞ்சிட முனைஞ்சேன். தப்புதான் ... கன்னி கழியாப் பொண்ணு உங்கிட்ட, திருப் பூட்டறத்துக்கு முந்தி இப்படி ஈனத்தனமா நடந்துகிட்டது தப்புதான். சமிச்சுப்புடுலே!’ என்று கண்ணிர் காட்டிக் கெஞ்சினன் மூக்கன். ‘து போ அப்பாலே!”

தொண்டைக் கணப்பு எழுந்தது.

‘நீ செஞ்ச அடாபுடிக்கு ஒனக்கு ஊரறிய அம்பதுருவா அவராதம் போட்டிருக்கேன். அடிசாயுறதுக்குள்ள பணம் முச்சூடும் எங்கைக்கு வந்துப்புடனும்!...ம்... ஒனக்கு கல்ல விதி இல்லே! அதாலேதான் விதி ஒன் கண்ணேக் கட்டிப்புடிச்சுப்போல!... பொம்மியோடொத்த அழகுக் குட்டி ஒன்க்குக் கெடைக்கிறதுண்ணு நீ பூர்வத்தில் எம்புட்டோ பூசை செஞ்சிருக்க வேணுமா?...ம்...பாவம்!...கட!...”

மூக்கன் செருமியவாறு கின்றன். மெய்தானுங்க ஆண்டே, கெசமாவே கானு பாவிதானுங்க; மொதலாளி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/210&oldid=684381" இலிருந்து மீள்விக்கப்பட்டது