பக்கம்:வேனில் விழா.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தா!

1. ஆதிபிரமர்

கிங்குல் தாய் கறுகிறத் துகிலெடுத்து, அதைத் தொட்டிலாக்கி உலக மக்களைப் படுக்கவைத்துத் தாலாட் டுப் பாடிக்கொண்டிருந்த வேளை அது. பலருக்கு உறக்கம் பிடித்தது. சிலர் கொட்டாவிகளை எண்ணிக் கணக்கிட்டுப் பிரித்துக் கொண்டிருந்தனர்; எஞ்சியவர்களுக்குத் தூக்கம் வேம்பானது. இந்தக் கும்பலில்தான் அவளும் சேர்த்தி.

அவள் என்றால் மட்டும் போதுமா?-போதாது. அவ ளுக்கும் பெயர் ஒன்று உண்டு. பெயர் சூட்டும் நிகழ்ச்சி ஒரு விழாவாக அமையாமற் போனுலும், அந்தப் பெயரை அவளுக்கு இட்டு அழைப்பதற்கு அவளுடைய பெற்றாேர் கள் எவ்வளவோ காலம் காத்துத் தவங்கிடந்தார்கள். பொறக்கப் போறது ஆண் குஞ்சாக இருக்கோணும், ஆதி பிரமர் சாமியே!’ என்ற அவர்களது வேண்டுதலை’ பலிக்க வில்லை; ஆளுல் பிறந்த பெண் குழந்தை மூக்கும் முழியு மாக இந்த மண்ணில் முதற் குரல் கொடுக்கத் தவற வில்லை.

அவள் பெயர் என்ன தெரியுமா? பொன்னரசி பெய ரைச் சொல்லும் உதடுகளில் கற்கண்டுச் சுவை வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/212&oldid=684383" இலிருந்து மீள்விக்கப்பட்டது