பக்கம்:வேனில் விழா.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ஆத்தா !

வதைப் போலவே, அவளைப் பார்க்கும் கண்கள் அன்புப் போதையும் இன்பப் போதமும் பெற்றுத் திகழும். பொன் னுக்கு அரசியாகவும், பெண்ணுக்கு அரசியாகவும் விளங் கின மகளுக்கு கடை வண்டி கொடுத்தவர்கள் அவளே ஈன்று வளர்த்து வந்தவர்களேதாம். என்றாலும், ஓர் அதி சயம் என்னவென்றால், பருவம் , தாவணியையும், காலம் பருவத்தையும் பரிசளித்தன. அவள் சமைந்தாள்’. திறந்த வெளி அரங்கமாக இயங்கிவந்த ஊரும் உலகமும் அன்று தொட்டு அவள்வரை சுருங்கிக்கொள்ளப் பழகிக்கொண் டன். அவள் மனம் புழுங்கினுள். விரக்தியின் கெட்டு யிர்ப்பும், வேதனையின் குமைச்சலும் அவளது பருவத் துடிப்பைக் கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தருணத்தில் ஆசை முகமொன்றை ஆர்வம் பொங்க மனத்திரையில் வரைந்து ஓவியமாக்கி அனுபவித்து ஆறுதல் பெற்றாள் அவள். மச்சான் இந்தக் கணக்குக்கு பர்மாவிலே மாங் தளையிலேருந்து திரும்பினதும், எங்கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டிடுவாங்களாமே!’ என்று தனக்குத்தானே வின வடிவில் விடை அமைத்துப் பூரித்துப் போயிற்று பெண் உள்ளம். கனவின் வடிவிலே காதல் வளர்ந்தது; காதலின் உருக்கொண்டு கனவு நீண்டது. காதலும் கனவும் ஒட் டாத இரு துருவங்கள் என்கின் ருர்களே? ஐயை அறி வாளோ? -

2. ஆஞ்சநேயன்

முன்னைப் பழங்கதை ஆயிற்றே இத்தனையும்:

பொன்னரசி விம்மினுள். ஏன்? வாழ்க்கைப் பாதையில் இருபத்தெட்டு மைல் கற்களைக் கடந்து வந்தவளுக்குத் துயரம் ஒரு கேடா, என்ன?.

பொன்னரசியின் செவிப்புலன், எங்கிருந்தோ மிதந்து வந்து மோதிய அழுகைக் குரலை நுகர்ந்தது. அவளும் கெஞ்சு வெடிக்க விம்மலாளுள் : துயரம் மண்டிய ஒலத்தினின்றும் பிரிந்து தெரிந்த அந்தக் குழந்தையின் கதறல் அவளுடைய நெஞ்சில் அடித்தளத்தில் சம்மட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/213&oldid=684384" இலிருந்து மீள்விக்கப்பட்டது