பக்கம்:வேனில் விழா.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ஆத்தா !

ஆதரம் துள்ள பொன்னரசி குழந்தையை அணு. கினுள்; குனிந்து அதை வாரியெடுத்து அணைத்துக்கொள்ள முனைந்த நேரத்தில், இருதயத்தில் இடியொன்று வீழக் கண்டாள்; இடியோசை காதுகளைச் செவிடுபடச் செய்தது. அணைக்கத் துடித்த கெஞ்சு கஞ்சம் உண்டாற்போலப் பதைத்துப் பின் த்ங்கிற்று. “ஆ1.ஐயோ!’ எ ன் று கூக்குரல் பரப்பினுள் பொன்னரசி. உதிரம் கொட்டியது, கண்முனைகள் இரண்டிலுமிருந்து. அடிவயிற்றில் அவளது மெலிந்த விரல்கள் இழைந்தன. மறுகணம் அவை சூடு பட்டுச் சூம்பின. அமிர்தம் பிறக்கும் பகுதிகளில் தீ அழல் எரிந்தது. நெற்றிப் பொட்டுத் தெறித்தது. ஐயையோ ! என்று கூப்பாடு போட்டவாறு பொன்னரசி மண்ணில் சாய்ந்தாள், அடி துண்டு பட்ட முருங்கையைப் போன்று.

அப்போது, ஆத்தா ஆத்தா’ என்ற அழைப்புக் கேட்கத் தொடங்கியது.

அவள் விழிகளை விலக்கிள்ை. ஒருகால் ஆத்தா என்ற சொற்கள் அவளுடைய உந்திக் கமலத்தைத் தொட் டனவோ ? அவள் திகைப்படைந்தாள். குஞ்சுக் குழந்தை பிஞ்சுக் கைகளையும், பஞ்சுப் பாதங்களையும் பயன்படுத்தி முன்னேறி அந்தப் பஞ்சையிடம் பால் சேகரம் செய்ய எத்தனித்துக்கொண்டிருந்தது. பேசாத பொற் சித்திரத்தை நெஞ்சுடன் கெஞ்சு இறுத்தி இறுக அனைத்த வண்ணம் சத்தைக் கூட்டி எழுந்தாள் பொன்னரசி. எடுத்த முயற்சியில் தோல்வி கண்ட சிசு வீரிட்டு அலறியது. தாய்க் காரி அப்போது மட்டும் எப்படியோ விழித்து விட்டாள்; சீ! துத்தேரி!” என்று ஏசியபின் குழந்தையை அவளிட மிருந்து பிடுங்கிக்கொண்டாள்; காறித் துப்பிளுள்! எச்சிலைத் துப்பியவள் மீதும் அந்த எச்சில் துளியொன்று பட்டது. கோடை மழைக்குக் கட்டியங் கூறியது கொடி மின்னல்,

3. துர்க்கை

புதுக்கோட்,ை பஸ் கிலயம் உதய சூரியனின் கருனைப்

பார்வைக்கு ஆளானது. வாகன ஊர்திகளும் பிரயாணி களும் கலந்த ஒர் அவசர அவசியச் சூழலிலே, கால

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/215&oldid=684386" இலிருந்து மீள்விக்கப்பட்டது