பக்கம்:வேனில் விழா.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 2 : 5

மெனும் திரி இயற்கை யென்னும் விளக்கிலே கின்று கிதா னித்து எரிந்துகொண்டிருந்தது. முத்திநெறி அறிந்த தவமுனியின் இதயம் போல கிர்மலமாகக் காட்சி கொடுத் தது விண். துறவு மேற்கொள்ள கெஞ்சுரம் பூண்டவன், அதே மனநிலையில் செயற்பட இயலாமல் சலனமுற்றுத் தவிப்பதைப் போன்று இருந்தது மண்.

விடிவெள்ளி விண்ணத் தொட்டதும், தூற்றல் மண்ணைத் தொட்டது. பொன்னரசி, சீர்குலைந்து பழுது பட்ட கடுத்தெரு துர்க்கையின் சில கிலையில் இருந்தாள். கனேந்த மாதிரியே கிழிந்த துணி உலர்ந்து விட்டது. அவளுடைய தளர்ந்த மனத்தில் அக்கணம் செக்கிறம் காட்டிய கேள்வி இது ஒன்று மட்டுந்தான்; கான் எத்தனையோ வாட்டி செத்து மடிஞ்சுப்பிடத் துணிஞ்சப் போவெல்லாம் என்ைேட கன பலிக்குமிங்கிற ஆசை மனசிலே ஓடினதாலேதானே நான் உசிர் மேலேயும் ஆசை வச்சுக்கிட ஆரம்பிச்சேன். ஆன, இனிமே என் கேன்ப்பு எங்கே பலிக்கப் போவுது?...ஆமா, மெய்தான், இனி நானும் மக்கி மடிஞ்சு மண்ணுகிப் போளுப் போலேதான்!...’

ஆளுடைய அடிகளாரின் கவியின் ஒரு பகுதியை சாது ஒருவர் அடித் தொண்டையில் ஏற்றிப் பாடிக்கொண்டிருக் தார்.

“தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!

வழுவு இலா ஆனந்த வாரி போற்றி ! அழிவதும் ஆவதும் கடந்தாய் பேற்றி!.

முழுவதும் துறந்த முதல்வா போற்றி !’ நாணயம் புழங்கத் தொடங்கிற்று ; காவி வண்ணம் கொண்டிருந்தவர் திசை திரும்பினர்.

குலதெய்வத்தின் கினைவு பொன்னரசிக்கு ஏற்பட்டது. முன்னடியான், சன்னசி, சங்கிலிக்கருப்பன் துணையுடன் நின்ற ஆதிபிரமரின் பயம் செறிந்த பாவம் தோன்றியது.

கண்களிலிருந்து உதிரம் கொட்டியது.

புழுதி மண்ணில் ரத்தத் துளிகள் சிந்தித் தெரித்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/216&oldid=684387" இலிருந்து மீள்விக்கப்பட்டது