பக்கம்:வேனில் விழா.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 217

5. காட்டேரி

அக்திசந்திப் பொழுது. அப்படிப்பட்ட நடுவேளைப் பகுதியிலே, ஒருநாள், தண்ணிர் கொணர குளத்திற்குச் சென்றாள் பெரன்னரசி. வயல் வர்ப்பைப் பார்த்து திரும்பிக் கொண்டிருந்தான் கங்காணி மகன் கந்தசாமி. அந்தம் நிறைந்த எழில் வதனம் , அரும்பு மீசை ; குறும்புப்பார்வை; இரும்பு உடல். அக்கரைச் சீமை சீராட்டி வளர்த்த செல்வச் சீமானின் புதல்வனல்லவா? சின்னவயசில் கட்டுப் பாண்டி ஆடிய காலத்தே அவன் அவளைக் கண்டது உண்டு. இனம் கண்டு கொண்டான் ; ஆளுல் அவள் பார்வை தட்டுப்பட்டதும், அவனுக்கு இனம் விளங்கமாட் டாத ஒரு கிளர்ச்சி ; கிறைவு.

புன்னகையும் புது நிலவும் அவர்கள் இருவரையும் அக்தரங்கமாகச் சக்திக்க உதவின. எட்டப் பழமாக இறக்காத தேளுக இருந்து வந்த பொன்னரசியின் உருவம் கந்தசாமியின் புகைப்படக் கருவிக்குத் தப்பவில்லை. ஊர்க் கோடியில் சந்தித்துவந்த அவன் ஒருநாள் மதியத்தில் அவளுடைய வீடுதேடி வந்துசேர்ந்தான்.

‘பொன்னரசியை நான் கட்டிக்கிடலாம்னு எண்ணி யிருக்கேன். அப்பாவுக்கு கண்டிக்கு தபால் போட்டிருக் கேன். தாக்கல் வந்த கையோடு கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடவேண்டியதுதான்!”

செய்தியை வெளியிட்டான், பொன்னரசியைப் பெற்ற, வளிடம். - .

தன் புருஷனுக்குக் கடிதம் எழுதி இது பற்றி முடிவு சொல்வதாகத் தெரிவித்தாள் பொன்னரசியின் தாய்.

காலிலே இரண்டிலே வந்து போனுன் கந்தசாமி. அந்த எழிலரசியைக் காண. ஒருங்ாள் உச்சிப் பொழுது. பொன்னரசி மட்டுமே வீட்டில் குந்தியிருந்தாள். அவள் அன்னே சந்தைக்குச் சென்றிருக்கும் விவரமும் கிடிைத்தது. குளித்து முழுகி வந்திருந்த பொன்னரசி ஈரப் புடவையைக்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/218&oldid=684389" இலிருந்து மீள்விக்கப்பட்டது