பக்கம்:வேனில் விழா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 8 i

தங்கள் தபால் கிடைத்தது. என் தகப்பனுரும் அதைப் படித்துப் பார்த்தார். மனம் ஒப்புதல் இல்லாத இடத்தில் என் வாழ்வு உள்ளடங்கிவிட என் அப்பா விரும்பவில்லை. ஆகவே, கம் காதலும் கனவும் சிதைய வேண்டியதுதான் போலும்! சொர்க்கத்தில் கலியாணம் நிச்சயிக்கப்படுவதாக நாம் படித்த ஒரு இங்கிலீஷ் பாட்டை நாம் அடிக்கடி பாடிப் பாடி மகிழுவோமே? இப்போது, சகலமும் கனவுதானு? தவறு என்பேரில் இல்லை; மன்னியுங்கள். இக்கடிதம் கட்ட, என் தந்தையாருக்குத் தெரியாமலே எழுதலுற்றேன். நீங் கள் ஊர்போய்ச் சேருமுன்னே கேரில் சொல்ல நினைத் தேன். அதற்குள் தாங்கள் புறப்பட்டு விட்டீர்கள். இக் கடிதத்தைப் படித்தானதும் தயவுசெய்து கிழித்தெறி யுங்கள.

இப்படிக்கு, திலகவதி.

அலமேலு அம்மாளின் புறவெளிப் பார்வை மங்கி மழுங்கிவிட்டது. புவனம் சுழன்றது. பூகம்பம் அதிர்ந்தது: எரிமலை புரண்டிது. காட்டு வெள்ளம் பொங்கிற்று. என் மகன் சாரங்கன் பட்டணத்தைவிட்டு இங்கே வந்திட்டாளு? ... எங்கே வந்திருக்கான்?...அப்ப்டின் னு, அவன் பட்டணத் திலே இல்லையா?... எங்கே போனுன்...என் ஆணை நிஜ மாவே அவனைப் பைத்தியமாயடிச் சிருச்சா?...மெய்யாகவே அவன் க. டப் பிணமாயிட்டானு?...தம்பி...சாரங்கா!... உன்னே நான் திரும்பப் பார்க்கிறத்துக்குக் கொடுத்து வச் சிருப்பேனு, சாரங்கா!...தெய்வமே, என் ஒரே மகனைக் காப்பாத்தித்தா!...’

போட் மெயில் தஞ்சைக்கும் சென்னைக்கும் இடைப் பட்டிருந்த துரத்தைத் துண்டித்தது.

சாரங்கராஜனின் கடிதத் தலைப்பில் இருந்த விலாசத் தைக்கொண்டு, அவ்விடத்தை அடைந்தாள் அலமேலு அம்மாள். அவளுடன், அவர்கள் வீட்டுக் கணக்குப் பிள்ளை யும் தொடர்ந்து வந்திருந்தார். அது ஒரு லாட்ஜ். சாரங்க ராஜன் அவ்விடத்தைக் காலி செய்துவிட்டு ஊர் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/22&oldid=684391" இலிருந்து மீள்விக்கப்பட்டது