பக்கம்:வேனில் விழா.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஆத்தா !

தரவில்லை. அதுவரை சுமையாகத் தோன்றிய அங்த ‘இன்பச் சுமை"யின் மகிமை இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. கங்காணி மகன் காட்டின ஆசையிலே மோசம் போன நான் கடைசியிலே என்னுேட செல்வத்தைப் பறி கொடுத்துப்பிட்டேனே?’ என்று புலம்பினுள். குழந்தை மரித்திருக்க நியாயமில்லை என்றவரைக்கும் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. வழிப்போக்கர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் எனவும் திட்டமிட்டாள். உடனேயே வெறிபிடித்தது போல அந்தப் பாதையில் தொடர்ந்து கடக்கலாஞள், காளிபோல. தவறி விழுந்த புகைப்படங்கள் அவளுடைய பார்வையில் பட்டால் தானே? பொழுது விடிந்ததுதான் கண்ட பலன். குழந்தை கிட்டவில்லை !

அண்டைக் கிராமததில் மூர்ச்சை போட்டுச் சாய்ந்து விட்ட பொன்னரசியை கிலேஉணர்ந்த நல்லவர்கள் காத்துப் பேணினர்கள். ‘ஏண்டா ராஜா என் வயத்திலே வந்து ஒண்டினே?... ஐயோ, நான் பேய்!” என்று தனக்குத்தானே பேசித் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டு நாட்கள் சில வற்றை ஒட்டினுள் அவள். புகல் கிடைத்த இடத்தில் கழுகு’ ஒன்று வட்டமிடுவதை யூகித்த அவள் தன் வச மிருந்த பசி கொண்ட கத்தியின் துணையுடன் அங்கிருந்து மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தாள். ஆஞ்சநேயர் சங்கிதியில் மண்டியிட்டு அழுது தன் தவற்றைப் பொறுத் தருளுமாறு கதறினுள். என் குழந்தை உசிரோட இருக் குமா?... என் கைக்கு திரும்பவும் கிடைக்குமா?’ என்று ஆஞ்சநேயரிடம் மானசீகமாகக் கேள்வி விடுத்தாள். கல்ல பதிலே கிடைத்தது. அப்பொழுது அவளுக்குத் தன் உயிர் மீது ஒரு கவலையும் ஓர் அக்கறையும் ஏற்படலாயின. ம், என்னுேட மகன் எனக்குக் கிடைச்சதும், என்னை ஏமாத் தின அந்தப் பழிகாரனே பழிவாங்கிப் பிடுறேன்!...” என்று சூளுரைத்துக் கொண்டாள்!

7. அங்காளமமை

பத்து ஆண்டுகள் கழிந்து போயின. நிகழ் காலத்துக் கும் இறந்த காலத்துக்கும் பாலம் சமைத்த அந்தப் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/221&oldid=684393" இலிருந்து மீள்விக்கப்பட்டது