பக்கம்:வேனில் விழா.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 221

பொழுது எப்படித்தான் ஓடி கழுவியதோ? தண் எழில்மாற்றுக் குறைந்த கொஞ்சும் அழகு மறுமுறையும் கறை படலாகாதே என்ற நினைவில் பசியும் பட்டினியுமாகக் கிடந்து, அவ் அழகைச் சிதைத்துக் கொண்ட அந்த விங்தைச் சம்பவம் அவளே மறக்க முடியாது. பத்து மாசம் சுமந்த பாலகன் உங்கிட்டே இருந்தா, இந்நேரம் உன்னுேட சபதமும் பலிச்சிருக்கும்; உனக்கும் ஆறுதல் சொல்லியிருப்பான்!. தாயாக இருக்க வேண்டிய நீ பேயா கிப் போனியே?...’ என்று அவளுடைய மனச்சான்று ஏசித் திட்டி, ஆருத புண்கள் ஆயிரமாயிரத்தை கெஞ்சத்திலும் பெற்ற மணி வயிற்றிலும் நிரப்பிவிட்ட துயர அனுபவங்களே. அவளால் மறத்தல் சாத்தியமன்று.

காட்டுப் புதிரிடுக்கிலே புழுதி மண்மீது ரத்தக்கறையும் தானுமாகக் கிடந்த அக்குழவியை இமைப்போதுதான் அவள் கண்டிருக்க முடியும். உருப் புரியாத தோற்றமும், உருப் புரிந்த ரத்த வெள்ளமும் அவளே ஒவ்வொரு கணமும் சாக்டித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சித்திரவதை யிலும் அவளுக்கு ஓர் ஆனந்தம் ஏற்படத்தான் செய்தது. “ஆமா, நான் இப்பிடிச் சாகாமல் செத்துக்கிட்டிருப்பதுதான் கல்லது. கான் செஞ்ச மன்னிக்க ஏலாத குத்தத்துக்கு இதுதான் தகுந்த தண்டனை!...”

பொழுது ஏறிக் கொண்டிருந்தது.

மூச்சுப் பிடித்தது; எப்படியோ எழுந்தாள் பொன்னரசி. கந்தலும் கிழிசலும் கொண்ட துணி மூட்டை அவள் கக்கத் தில் இருந்தது. கத்தி முனே தோலில் உரசியது. அவளது வைரியான கந்தசாமியின் படமும் அவளுடைய படமும் ஞாபகத்தில் ஓடின, அவை என்றாே எப்படியோ அவளிட மிருந்து பிரிந்து விட்டனவே...? கடந்தாள்.

கீழராஜ வீதியிலிருந்து மடங்கி, சென்ற வழி வழியே மறுகி கடந்தாள் அவள். புதுக்குளம் வந்தது. படி ஏறிச் செல்ல அடிவைத்த போது, தொங்கல் வீட்டில் கல்யாணம் கடந்ததை அறிந்து அங்கு சென்றாள்; வெள்ளே பூசிய சுவர்களும் வாழைத்தார் கட்டின காவனமும் அவளேக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/222&oldid=684394" இலிருந்து மீள்விக்கப்பட்டது