பக்கம்:வேனில் விழா.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 223

ஆசையாச்சும் பலிக்குமான்னுத்தான் அங்கங்கே வேலை வெட்டி செஞ்சு, கிடைச்ச சோத்துப் பருக்கையைச் சாப் பிட்டு உசிரைக் காப்பாத்தினேன். ஆன, என் ஆசை அவிஞ்சிருச்சு; இனி எங்கே என் கண்மணியை காணப் போறேன்? ஐயோ, கான் மாபாவி...!

குளத்துக்குக் கீழ் இறக்கத்தில் ஓடிய சாலையில் கிழ லடர்ந்த மரங்கள் தென்பட்டன. சறுக்குப்படி வழியாக அவள் இறங்கினுள். கால் சறுக்கியது. முதல் படியில் விழுந்த அவள் மறு படிக்குப் புரண்டாள். பிறகு அப்படியே உருண்டு விழுந்து விட்டாள், பாவம்!

8. முத்துமாசி

‘அம்மா!...அம்மா...!” பொன்னரசி விழிகளே விரித்தாள். ஆலமரத்தடியில் யாரோ சிறுவனின் மடியில் தலைசாய்ந்து கிடப்பதை உணர்ந்தாள். அவசரப்பட்டு எழ முயன்றாள். கெற்றி மேட்டிலிருந்து வேதனை குரல் தந்தது. எழுந்தமர்ந்ததும், முதலில் தென்பட்டவை: பக்கத்தில் சிதறிக் கிடந்த ரத்தத் துளிகள்; துடிக்கும் இதயத்தோடு அந்தப் பையனை ஏறிட்டு நோக்கினுள். வழிந்த கண்ணிருடன் அவன், அம்மா, நீங்க பிழைச்சிட்டிங்க... இனிப் பயமில்லை. இங்தாங்க... ஒரு மடக்கு காப்பித்தண்ணி குடியுங்க” என்று சொல்லிக் காப்பிக் குவளையை அவள் கரம் தொட்டு நீட்டினன்.

பொன்னரசிக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டது. அவ ளுடைய பெற்ற வயிறு என்றுமே அடைந்திராத அமைதி யைப் பெற்றது. மார்பகத்தில் பால் வெள்ளம் பாயத் துடிப்பது போலவும் உணரலாளுள், இமை மூடாமல் அவ னேயே பார்த்தாள். பத்து அல்லது பதினுேரு வயசான அச்சிறுவன் ராஜா மாதிரி இருந்தான். செம்மறியாட்டுக் கும்பல் காவிக் கோலம் திகழ அவன் பின்னே அணி வகுத் திருந்தது. அவனது நெற்றிப் பக்கம் கூர்ந்து நோக்கினுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/224&oldid=684396" இலிருந்து மீள்விக்கப்பட்டது