பக்கம்:வேனில் விழா.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ஆத்தா !

அந்த இடத்தில் பெரிய தழும்பு காணப்பட்டது. ஆதி பிரமரே, இவனே தான் எம்மகளு...?

தான் மயங்கிச் சுருண்டு புரண்ட கிகழ்ச்சி அப்போது தான் பொன்னரசிக்கு விளங்கியது. அவள் அவன் கதை யைக் கேட்டாள்.

‘அம்மா, கான் அனுதை. என்னைப் பெத்த ஆத்தா பிறந்த மேனியா என்னைக் காட்டிலே அனுதையா வீசிப் போட்டுப்பிட்டுப் போயிட்டாங்களாம்; வழியிலே கண்ட வங்க என்னை வளர்த்து ஆளாக்கிளுங்க, யாரோ ஒருத்தன் ஆசைகாட்டி எங்க அம்மாவை ஏமாத்திப்பிட்டானும்; அத ஞலேதான் என் தாயார் என்னே அனுதையாக்கிப்பிட்டாங்க போலே!... என்னைப் பெத்தவளே-என் தாயை ஒரு கடை யாச்சும் கண்டாத்தான் என் ஆவி வேகும்...ஆனு, ஈவிரக் கம் இல்லாம என்னை வீசிப்பிட்டுப் போன ஆத்தாவுக்கு கல்ல தண்டனை கொடுக்கவும் கொடுப்பேன்!... என்னைப் பெத்தெடுத்த அம்மாவை ஏமாத்தின. அந்த மனுசனை...ம்... என் அப்பனை எப்போ கண்டாலும் அப்பவே கண்டங் துண்டமாச் சீவிப் போடுவேன். அவன் படம் எங்கிட்டே தான் இருக்கு; எங்க அம்மா படங்கடட வச்சிருக்கேன்; என்னை வளர்த்தவங்க கொடுத்திருக்காங்க!...”

பையனின் கண் இமைகள் நனைந்து ஈரமாயின. அவனுக்குத் தெரியாமல் பொன்னரசி கேத்திரங்களைத் துடைத்துக் கொண்டாள். சிறுவனுக்குப் பக்கமாகக் கிட்ந்த முடிச்சிலிருந்து தலை நீட்டிய புகைப்படங்களை எடுத் தாள். ஆம்; ஒன்று அவள் படம்; இன்னென்று கந்தசாமி யின் நிழலுரு. மறுபடியும் அவற்றை முடிச்சுக்குள் திணித் தாள.

‘கடவுளே, நீ ரொம்ப நல்ல சாமி.என் ஆசை நிறை வேறிடுச்சு...இம்பிட்டு நாளா நான் பட்டபாடு வீண்போகல. என் வைரியை பழி வாங்கிறதுக்கு என் மகன் கிடைச்சுப் புட்டான்!...”

‘தம்பி, உன்னேட ஆத்தாவை நேரிலே கண்டா அவ. பேரிலே ஒனக்கு ஆத்திரங்தான் வருமா?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/225&oldid=684397" இலிருந்து மீள்விக்கப்பட்டது