பக்கம்:வேனில் விழா.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 225

“ஆமா; என் பேரிலே ரவைகsட ஈவிரக்கமில்லாம என்னே விட்டுப் போட்டுப் போன குற்றத்துக்கு அவங்க மேலே ஆத்திரம் தான் வரும்!”

விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையில் பொன்னரசி தத்தளித்துக் கொண்டிருந்தாள்; மறுவிடிை, பித்துப் பிடித்த மாதிரி கீழே கிடந்த பாருங்கல்லில் மோதிக் கொண்டாள். ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.

சிறுவன் அவளுடைய தோளேப் பற்றித் தடுத்தான். அதே சமயம் வேறொரு புதுக்குரல் கேட்டது: “ஏம்மா, ஏம்மா!’ என்று ஓடி வந்தான் மீசைக்காரன் ஒருவன். அருகில் ரேக்ளா வண்டி நின்றது.

பொன்னரசி தலை நிமிர்ந்தாள்; அந்த மனிதனைப் பார்த்தாள். விழுங்கி விடுபவள் போல முறைத்துப் பார்த் தாள். புகை நெளிந்தது. முடிச்சில் ஒளிந்திருந்த கத்தி அவள் கைக்கு வந்தது.

செம்மறியாடுகள்: மேய்க்கும் பையன் ஒன்றும் புரியா மல் பரக்கப் ப்ரக்க விழித்தான்.

‘தம்பி, இந்த ஆளுதான். உன் அப்பன்!” என்றாள் அவள், வெறியுடன்.

“ஆ! அப்பிடியா...?’ மீசைக்கார மனிதனே கோக்கிக் கைக்கம்பை வீசிஞன் சிறுவன். அவன் சுருண்டு விழுந்தான். நெற்றியிலிருந்து ஊற்றெடுத்த ரத்தவெள்ளம் பூமித் தாய்க்கு வைத்த குருதிக் குங்குமம் அச்சமுறத் துலங்கிக் கொண்டிருந்தது.

பொன்னரசி, என்னைப் மன்னிச்சிப்பிடு. இப்போதே என்னுேட வந்திடு. நான் உன்னைக் காப்பாத்துறேன்... கம்ப மகனையும் கண்டு பிடிப்போம்...!” என்றான் அவன்கந்தசாமி.

பொன்னரசியின் கையிலிருந்த கத்தி மின்னியது. ரத்தக் காட்சியைக் கண்டதும் அவள் மனத்தில் புயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/226&oldid=684398" இலிருந்து மீள்விக்கப்பட்டது