பக்கம்:வேனில் விழா.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஆத்தா !

நீங்கிய அமைதி கனிந்ததோ? கத்தி கழுவியது. பைய னுடைய கையைப் பிடித்து அழைத்து வந்தாள். “பாவம், மன்னிச்சிடு; அந்த ஆள் எக்கேடு கெடட்டும்!’ என்று வேண்டினுள் அவள்.

புழுதி வழியே ரத்தத் துளிகள் சுவடு காட் டிக்கொண் டேயிருந்தன.

“அப்பனக் காட்டினிங்க; என் ஆத்தாவையும் காட்டி மாட்டீங்களா, அம்ம ?’ என்று விம்மிய பையன் அவளைப் பரிதாபம் இழையோட நோக்கலுற்றான்.

“தம்பி, பழிக்குப் பழி வாங்கத்தானே உன் அம்மாவை நீ இப்ப தேடுறே?...”

“ஊஹூம், அவங்களே மன்னிச்சிடுவேன்; அவங்க என் தாய்!”

அடுத்த கணம் என்ன எண்ணினனே, தன் முடிச்சி லிருந்த புகைப் படத்தை எடுத்துப் பார்வையிட்டான் அவன்.

“ஆத்தா...!” நெஞ்சில் பாய்ச்சிக் கொள்ள ஓங்கிய கத்தியைப் பிடுங்க முனைவதற்குள், செக்கிறம் பீறிடத் தலைப்பட்டது.

“ஆத்தா!... உங்களை நான் சாகவிடவே மாட்டேன். நீங்க என்ன அணுதையா விட்டது பெரிய தப்புதான். இருங் தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தெடுத்த தாயாச்சே நீங்க!... உங்களைத்தான் கிதமும் கையெடுத்துக் கும்பிட்டுக் கிட்டு வாரேன்.முத்துமாரி அம்மா, தோன் இனி எங்களுக்குத் துணை. இம்பிட்டு காளைக்கப்பாலே ஆத்தாளும் மகனுமான எங்க ரெண்டு பேரையும் மட்டும் பிரிச்சுப்பிடாதே!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/227&oldid=684399" இலிருந்து மீள்விக்கப்பட்டது