பக்கம்:வேனில் விழா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மனுேரஞ்சிதம்

‘கெடிலாக் புறப்படவிருந்த சமயத்தில், மழை புறப் பட்டுவிட்டது. எட்டிப் பார்த்தான். கண்ணுடிக் கதவுக்கு நந்தியாக கடிக்க மனமில்லை. டம்பப் பையும் கையுமாக தாரா கின்றிருந்தாள்.

இரக்கம் ஒரு விலங்கு-அல்ல. அது ஒரு சிலந்தி வலை. எங்கோ படித்ததை ஏன் அவன் எண்ணிப் பார்த்தான்? அதே சடுதியில் ஏன் அதை மறக்கவும் யத்தனம் செய் தான்?

“தாரா, மழை வேறு வந்துவிட்டதே?...என்னுடன் காரில் வருகிருயா?...உன்னே மயிலாப்பூரில் கொண்டு விட்டு விட்டு அப்புறம் அடையாறு போய்க் கொள்கிறேன். அது தானே எனக்கு வழியும்கூட?...” -

அவள் சிரிப்புக்கு இணக்கம் என்று அர்த்தம்.

மழைச் சரங்களினூடே கார் பறந்தது. புஷ்பக விமான மாக. தெரு விளக்குகளின் அடியிலேயே வெளிச்சத்தைப் பிரித்துக் காட்டியவாறு இடைகின்ற தெருக்கள் விடை பெற்றுக் கொண்டன. கடைபாதை வாசிகள் தம்பதி சமேதராகப் பின்னிப் பிணைந்து கிடந்தனர். அவனுக்கோ, அவளுக்கோ அவர்களேப்பற்றி அக்கறை கிடையாது. ஆணுல், அவர்கள் அவனைப்பற்றி, அவளேப்பற்றி அக்கறைப் பட்டார்கள். பேச்சு வளர்ந்தது. ஏ. பொண்ணு’ என்னு அப்பிடிப் பாத்துக்கினே கிக்கிறே? பாவம், ஒங் கொள்ளிக் கண்ணு அவங்கமேலே வுளுக்திடப் போவுது...புதுக்கண் ணுலம் போலே!...” . . . . . -

கார் திரும்பியது. அவனுடைய இடதுகைக் கடிகாரத் தில் அவளுடைய வலதுகை மோதிரம் உரசி விட்டது. கார் கின்றது. சைபைஜார் கின்றது. புஹாரி முகமன் சொன்னது. -

“சாயா இரண்டு!”

எதிரும் புதிருமாக பாதரஸ் விளக்கில் மிதந்தார்கள். ‘டை எம்பி விழுந்தது. நைலான் புடவையைவிட்டு வெளி யேறத் துடித்த வண்ணுத்திப்பூச்சிகள் எம்பிஎம்பிச் சிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/29&oldid=684408" இலிருந்து மீள்விக்கப்பட்டது