பக்கம்:வேனில் விழா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 31

அப்படியா?

வாழ்க்கையிலே காதலில் வெற்றி கண்டவர்களுக்கு அது ஒரு பூலோக சுவர்க்கம்; தோல்வி அடைந்தவர்களுக்கு அது ஒரு நரகக்குழி

பொய்! பொய்! பொய்!

முகுந்தனுக்கு உலகம், வாழ்க்கையெல்லாம் அப் பொழுது நரகக்குழியாகத்தான் தோன்றியது.

அழகுக்குப் பதவுரை சொல்லும் ஆருயிர் மனைவி இருக் தாள். எம்.ஏ. பட்டத்திற்குப் பலன் சொன்ன அந்த இங்கி லீஷ் கம்பெனியின் மான்ே ஜர் பதவி இருந்தது. கெடிலாக்” இருந்தது. வாணி இருந்தாள், அன்பு மனைவியாக. எல் லாம் இருந்தது-ஆளுல், காதல் இல்லை...! தாரா இல்லை.

சூன்யம் கையாண்டிச் சிரிப்புச் சிரித்தது. பெண்கள் மணவறையில் அமரத் துடிப்பார்கள். ஆண்களோ, திரு மன வினையினின்றும் எவ்வளவு தூரம், எவ்வளவு காலம் விலகிவிட முடியுமோ, அவ்வளவுவரை விலகியே யிருப் பார்கள்! .

தாரா!

அவள் அவனுடைய உரிமைப் பெண். பிஞ்சுக் கரங்கள் கட்டிய அன்பு மணல் வீட்டை காதல் அத்தாணி மண்டபமாக கிர்மாணித்துவிட வேண்டுமென்று பொழு தெல்லாம் கனவு கண்டார்கள். ஒரே கல்லூரியில் கூட்டுப் படிப்பு-எம். ஏ! காதல் என்ற ஒன்றே அவர்களது தாரக மந்திரமாக அமைந்தது. வாழ்க்கையையே காதலாக்கி விடப் பார்த்தார்கள். காதலையே வாழ்க்கையாக்கிவிடத் துடித்தார்கள். காதலில் தோற்றவன் உளறிக் கொட்டிய கவிதைகளை, எண்ண அலைகளைத் தேடிப்பிடித்துக் கிழித் தெறிக் தார்கள். காதலில் வெற்றி கண்டவனின் அனுபவ மொழிகள் அவர்கள் வரை யொன் மொழிகளாயின. திருமண நாள் வந்தது-ஆணுல், திருமண வேளை வர வில்லை. முகுந்தன்-தாரா இருவரும் தம்பதியால்ை, அவர் களில் ஒருவர் இன்ைெருவரை வெகு சீக்கிரமே இழந்துவிட நேரிடுமாம்!-காதல் தோற்றது. தோற்கடிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/32&oldid=684412" இலிருந்து மீள்விக்கப்பட்டது