பக்கம்:வேனில் விழா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மனுேரஞ்சிதம்

வாணி:-கான லாகி விட்ட அவனுடைய வாழ்வின் அன்பூற்றாகத் தோன்றினுள். இனிய பாதி-உயிர்த் துணை -மனே விளக்கு போன்ற முத்திரைகள் அவள் தாலிச் சரட் டில் மின்னின.

முதல் இரவு வந்தது. வாணி, நீ என் மனைவி. என் னுடன் இரத்தத்தோடு இரத்தமாக, உயிரோடு உயிராக, உணர்வோடு உணர்வாகப் பின்னிப் பிணைந்திருக்க வேண்டி யவள்-நீ என் மனைவி, உயிர், உலகம்! இது என் இரண் டாம் காதல். கலியாணத்திற்குப் பிறகுதான் சிலருக்குக் காதல் கனியுமாம்-காம் இந்த ரகம். உன்னிடம் நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. என் முதற் காதல் தோற்றுவிட்டது. மறந்துவிட மாட்டாயே?-தோன் நான். கான்தான் .ே..!”

வாணி புதுமைப் பெண்.

அவள் படித்திருந்தாள். ஒரு பெண் தன் புருஷனை வசீகரிப்பதில் தாசியாகத் தன்னை ஆக்கிக்கொள்ள வேண் டும்’ என்பதை.

அவன், அவளுள் இரண்டறக் கலந்தான்.

என்றாே ஒருநாள், தாரா வந்தாள். உருவம் தெரிந்தது; திகைத்தான். முதற் காதல் கண்ணின் விட்டது. அவள் வேலை வேண்டுமென்றாள். ஸ்டெனே டைப்பிஸ்ட்” ஆள்ை. ஆபீஸ் விவகாரங்கள் எல்லையிலேயே சுபம்’ கூறின.

அன்றைக்கு அழகி தாராவின் மோதிரமும் முகுந்த ன் கைக்கடிகாரமும் கைகுலுக்கி கொண்டபோது-? ஒரு சில கணப்பொழுதிலே, ஒரு பெண் நீண்ட காலத்திய உணர்ச்சிமயமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். தாரர்வுக் கென்று-முகுந்தனுக் கென்று எழுதப்பட்ட எழுத்தா?-தாரா ஏன் விம்மினுள்?-உணர்ச்சி வசப்பட்ட வர்களுக்கு வாழ்வு ஒரு சோக நாடகமா?

அன்று, திட்டமிட்டிருந்த திரைப் படத்திற்குத் தன் உயிரின் மறு பாதியை அவன் சமாதானப்படுத்தி அழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/33&oldid=684413" இலிருந்து மீள்விக்கப்பட்டது