பக்கம்:வேனில் விழா.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 33

துச் செல்வதற்குள், அவன் பட்டபாடு சொல்லத் தரமல் லவே?-'வாணி, மனம் சலனமடைந்ததென்னவோ வாஸ் தவந்தான். ஆனல், நான் உன்னுடைய உரிமை என்பதை ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் உன்னைவிட்டு ஒரு நாளும் பறிபோக மாட்டேன். என்ன நம்பு, கண்ணே! இது ஆணே!”

அன்பு பயம் செறிந்தது.


வாழ்க்கை பயம் செறிந்தது! வாணிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. நோய்க்குப் பெயர்வைக்க டாக்டருக்கு ஆள் போயிருந்தான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி இருந்தது முகுந்தனுக்கு. அழ வேண்டும் போலிருந்தது. வாணியின் தங்கமேனியில் கெருப்பு மூட்டம் போடப்பட்டிருந்தது. பத்தரை மாற்றுத் தங்கம் உருகி வழிந்தோடிக்கொண்டிருந்தது.

காட்டிலிருந்து திரும்பிய ராமர், சீதையைத் தீக்குழி யில் இறங்கச்சொல்லி, அவளுடைய புனிதத்தைப் பரீட்சை செய்தாராமே?-வழிநெடுகக் கதைத்துக்கொண்டு சென்ற வனின் வாய்மொழி அவன் காதுகளே ஏன் முற்றுகையிட வேண்டும்?

“என் வாணி சொக்கத் தங்கம். நான் அவளுக்கு ஏற்ற கணவன்தானு என்பதைப் பரீட்சிக்க அவளல்லவா எனக்குச் சோதனை கடத்தவேணும்?...?-தன்னுள் தன தாக, தானே-தானுக-எண்ணமே அவளுக-அவனே எண்ணமாக, மனச்சாட்சியாக, மனிதத் தன்மையாகச் சுழன்றான்; கனன் ருன்; கதறினன்.

இடதுகையில் கடிகாரம் இழைந்திருந்த இடம் சுட்ட்து. தீக்குச்சியைக் கிழித்து அந்த இடத்தைப் பொசுக்கிவிடத் தான் துடித்தான். ஆல்ை, வாணி அவன் மீதல்லவா தன் அன்புப் பார்வையை வலைவீசியவாறிருக்கிருள்? நோயின் வேதனையை மறக்க முடிந்ததுபோலும்!

பொங்கி வந்தது கண்ணிர். அவள் பார்த்துவிட லாகாதேயென்று முகுந்தன் எதிர்ச் சுவர்ப்பக்கம் திரும்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/34&oldid=684414" இலிருந்து மீள்விக்கப்பட்டது