பக்கம்:வேனில் விழா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 35

வந்தவள், கம்ப. காரிலேயே பின் nட்டிலே உட்கார்ந்தேன். கடர்கா உங்ககிட்டே சேதிசொல்ல ஓடிவரத் துடிச்சான். உங்களுக்கு ஆபீஸ் நேரத்திலே தொந்தரவு தரக்கூடா தேன்னுதான் இப்படி நடந்துகிட்டேன். நீங்க வந்தீங்க. என்னைக் கவனிக்கல்லே. சின்ன தமாஷ் ஒண்னு பண்ண லாம்னு கடுதாசியிலே ஏரோப்ளேன் பண்ணி உங்க தலை மேலே பறக்கவிட ரெடியாயிருக்கறப்போ, அந்தப் பொண்ணு வந்துட்டாங்க. கம்னு அப்படியே கான் உட் கார்ந்திட்டேன். மழை பேஞ்சது. உங்க மனித மனம் ஒத்தாசை செஞ்சது. ஆக, நீங்க ரெண்டு பேரும் மாத்திரம் சாயா சாப்பிட்டிங்க...! ம்! அவங்க மைலாப்பூரிலே இறங் கிட்டாங்க. கம்ப வீட்டிலே நீங்க இறங்கினதும், என்னைப் பேர் சொல்லிக் கடப்பிட்டிங்க. நான் மூச்சுக் காட்டாமக் கதவைத் திறந்து வெளியே வந்ததுங்தான் குரல் கொடுக்க னும்னு பத்துத்தரம் கினேச்சிருங்தேன். என் குரல் வரலை யானு, பதட்டப்பட்டுப் போவீங்களேன் னு, கான் குரல் தந்துட்டேன். உங்களுக்கு முகம் வெளிறிப் போச்சு. சக்தர்ப்பங்கள் உதயமாகல்லையானு, அப்பால் வாழ்க் கைக்கே பொருள் தெரியாது; புரியாது. அத்தான், நீங்க வீணு உடம்பை அலட்டிக்காதீங்க. உடம்புக்கு வந்தா, எனக்குப் பொறுக்காது. எனக்கு இது ஒரு கனவுமாதிரி, கான் எப்பவோ மறக்திட்டேனே?”

டாக்டர் வந்தார். மிஸ்டர் முகுந்தன்! உங்கள் மனே விக்கு மன உளைச்சலினுல்தான் இந்த ஜூரம் வந்திருக் கிறது. அதிர்ச்சிதரும் விஷயம் எதுவுமே ஏற்படாமல் இருந்தால் நல்லது. நீங்கள் கவலைப்பட்டு விடாதீர்கள். இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும்” என்று உத்தா ரம் சொன் ஞர். உடற் பரிசோதனைக் குழலும் பாசக்கயிறும் ஒன்றுக்கொன்று எதிரான இரு துருவங்கள் ஆகாதவரை உலகம் பிழைத்துவிடும்.

டாக்டர் காப்பியைச் சுவைத்துப் பருகினர். முகுங்தனுக் கசந்தது. -

“டாக்டர், வாணிக்குக் காப்பி கொடுக்கலாமல்லவா?” “கட்டாது, கூடாது பித்தம்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/36&oldid=684416" இலிருந்து மீள்விக்கப்பட்டது