பக்கம்:வேனில் விழா.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மனேரஞ்சிதம்

‘நீங்கள் ரொம்ப அழகாகப் பேசlங்க!!’

is 2

“நீ ரொம்ப அழகாக இருக்கே!

“அத்தான், இதுக்கு மட்டும் பதில் சொல்லிப்பிடுங்க. நான் தூங்கிப்பிட்றேன். உங்கள் மேலே எனக்குள்ள உரிமை என்னிக்கும் திருடு போகாமல் இருக்குமில்லையா?”

“ஆண்டவன் சாட்சியாக, என் பேரிலே உனக்கிருக் கும் உரிமை ஒருநாளும் பறிபோகாது!...உன் காய்ச்சலுக் குக் காரணம் புரிந்துவிட்டது. தாராவை காளைக்கே வேலையைவிட்டு விலக்கி விடுகிறேன். இனி திருப்தி தானே?...” - -

இன்பக் கனவுகளின் அடிவாரத்திலே, வாணி ஆனந்த மாக கித்திரை வசப்பட்டுக் கிடந்தாள்.

முகுந்தன், காலடியில் கிடந்த அந்த மோதிரத்தைத் தூர விட்டு வீசினுன் தாரா’ என்ற எழுத்துகள் சிரித்தன -விஷச் சிரிப்பு: போதைச் சிரிப்பு! காதலுக்கு இதயம் இல்லை.

  காதலுக்குக் கண் இல்லை! சுட்டிப்பயல் ஓடுவதைப்போல் இந்தோ சிலோன் எக்ஸ் பிரஸ் தன்னை மறந்து, தான் தாங்கிச் செல்லும் ஆயிர மாயிரம் இதயங்களைப் பொறுப்புணர்ச்சியுடன் கினைந்து கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.

ஆந்தைக் கண்களில் அழகா சொட்டும்? ஆளுல், இருளின் கண்களில் அழகு சொட்டியது. வழிந்தது-தழ லுக்கே தண்மை சிரிக்கும் பாங்கிலே. இரண்டாம் வகுப்புப் பெட்டியை அவனால் ரசிக்க முடிய வில்லை. அருகில் அவள் இருந்திருக்க வேண்டாமா?பதட்டப்பட்டு விடாதீர்கள், சுவாமிகளே! அவள் என்றால், அவனுக்கு முன்றானே போடும் பாக்கியம் பெற்றவள்’உரிமை பூண்டவள்.-ஆம், அவள்-அவளேதான்!-- வாணி காளைத் திரும்பும்போது, இந்தப் பாழும் இருளில் கூட அவன் பூரணகிலவைத் தரிசிப்பான் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/39&oldid=684419" இலிருந்து மீள்விக்கப்பட்டது