பக்கம்:வேனில் விழா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ்.ஆறுமுகம் 39

பிரித்து வைத்திருந்த மலரின் ஏடுகள் அவன் கண் முன் ஓடின. அவன் கண்கள் மலரின் ஏடுகளிலே ஓட வேண்டாமா?

ஒரு காக்காய், குருவிகடட அவனுக்குச் சக பிரயாணி யாக-சக பிராணியாக இல்லை. பண வீக்கம் என்று எழுதட்டுமா? பண முடக்கம் என்றே புரியும்படி எழுதிவிட லாமா? இல்லை. மேலே நாகரிகம் மெளஸ்’ இழந்து வருகிற தென்று அர்த்தமா?-ஏதோ ஒன்று. தொலையட்டும், சனியன்! -

ஹோல்டாலில் பதிந்திருந்த கை கடுத்தது. தலையை உயர்த்திக் கொண்டான். காற்று தேவைப்படவில்லை. அனைத்தான்.

‘அன்புள்ள அத்தான் அவர்களின் பாதார விந்தங் களுக்கு, அனந்தகோடி நமஸ்காரம். என் உடம்பு முழுவ தும் தேறிவிட்டது. இந்த முப்பது நாட்களும் முப்பது யுகங் களாகி விட்டன. உங்கள் அன்பு நிழலில்தான் நான் உள்ளம் தேறுவேன். என்றைக்குத் தஞ்சை வருவீர்கள்? சீக்கிரம், அத்தான், சீக்கிரம்!

இப்படிக்கு, உங்கள் அடியாள் வாணி.

பி.கு:-நினைவிருக்கட்டும்-அகநானூறு.

சிரிப்பினுள் சிங்தை ஒடுங்கின்ை. சித்தனல்லமுகுந்தன்! துளக்கம் சொக்கியது. காற்று சுழன்றடித்தது; விம்மி வெடித்தது. தூங்கிப் போனவன் கண் மலர்ந்தான்.

அழகு கொலு வீற்றிருந்தது. வெறுமைக்குப் பிரியா விடை, திரும்பினுன் அழகு ரோஜா. ஒன்று கண் உறங்கிக் கொண்டிருந்தது. இனம் காண முடியவில்லை. முகம் மடித்து வைக்கப்பட்ட கரங்களில் புதைக்து கிடந்தது. ஆராரோ! பாட ஆசைப்பட்டானே, என்னவோ? சிதி விரதன் என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/40&oldid=684421" இலிருந்து மீள்விக்கப்பட்டது