பக்கம்:வேனில் விழா.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மனுேரஞ்சிதம்

எழுத்துகள் பூதாகாரமாகத் தெரிந்தன: “உனக்கு மேலே பேரும் அழகா இருக்கேன் ன்ை. கான் ஒண்னும் அழகில்லேன்னேன். யோ, யோ, யோன்னு கிட்ட வந்து...”

மலரை மூடினன். திரும்பிப் பார்த்தான். உடம்பில் சூடு, கெஞ்சில் சூடு, கினேவில் சூடு.

வாணி அன்றைக்குச் சாவின் தலைவாசலில் கின்றபோது கடறினளே, அதை இப்போது திரும்பவும் கினைவுபடுத்தி ஞன்: “அத்தான், எனக்கு உள்ள உரிமை என் உயிருள்ள வரை பறிபோவதை-பிறரால் பறிக்கப்படுவதை கான் சகிக்கமாட்டேன். இன்னென்று, நளாயினி கதை எனக்கு இஷ்டப்படுவதில்லை. தன் கணவனின் மிருக இச்சையைப் பூர்த்திசெய்ய வேண்டி, தன் புருஷனை- தீராத நோயாளிக் கணவனே-அவன் விரும்பிய தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றாளாமே? கிலோகிறுத்தப்பட்ட கற்பின் கதைக்குக் கைதொழுகிறேன். ஆனல் அவள் தன் உரிமையை இழக் ததை..சே! சே!... அத்தான், நீங்கள் என் சொத்து -உரிமை!’

பூகம்பமாக கடுங்கியது உடம்பு.

அழகி புரண்டாள். அழகு வெள்ளம் கால்வாய் கட்டி நுங்கும் துரையுமாகக் கொப்புளித்துக்கொண்டிருந்தது. யார், தாராவா?

அழகுச் சொக்கட்டானின் தீ நாக்குகள் பராசக்தியாக எரிந்துகொண்டிருந்தன. யார், வாணியா?

கண்களைத் தீட்டிக்கொண்டு பார்த்தான். தாரா’ என்ற இரண்டெழுத்துகள் பிறைநெற்றியில் ஒட்டப்பட் டிருந்தன. இருபது பேய்கொண்டவன் கிலே அவனுக்கு.

தாராவை வேலையினின்று நீக்கிவிட வேண்டிய நிலையில் வைத்துவிட்டது வாணியின் உரிமைப் போர். அப்பொழுது அவள் நிலவுப் புன்னகையும், காட்டாற்றுக் கண்ணிருமாக விடைபெற்றுச் சென்றதை அவன் ஏன் எண்ண வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/41&oldid=684422" இலிருந்து மீள்விக்கப்பட்டது