பக்கம்:வேனில் விழா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மனேரஞ்சிதம்

‘ஆ’ என் வாணி! என் வாணி! நீ கூட இந்தப் பாழும் புயலிலும் மழையிலும் அகப்பட்டுக்கொண்டு விட்டாயா?... கேற்று இரவு உலகம் பேயாகியிருந்ததோ? ஐயோ!...”

அத்தான், உங்களை உடனடியாகப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. ரயிலேறிவிட்டேன். உலகத்தில் எங்கோ தவறு, அநீதி கடந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இயற்கைத்தாய் இப்படிச் சீறியிருக்கவே மாட்டாள். நாம் இருவரும் கல்லபடி சந்தித்தோமே, என் தாலிப் பாக்கியம் தான்!” என்று சொல்லித் தன் காலியைப் பக்தியுடன் கண் களில் ஒற்றிக்கொண்டாள் வாணி.

பிரகதீஸ்வரர் கோயிலில் உதயகாலப் பூஜை நடந்தது. புதுப் பிறவியுடன் ஜோடியாகக் கைசேர்த்து கடந்தார் கள்; தேவதரிசனம் கிடைத்தது. திரும்பும்போது இன்னொரு ஜோடி தென்பட்டது.

“ஓ, தாராவா?...வாருங்கள், அத்தான்!” என்று வர வேற்றாள் வாணி.

  • அத்தான், செளக்கியமா? ...வாணியின் முயற்சி இல்லையென்றால், எனக்கு இவ்வளவு சீக்கிரம் கலியாணம் கடந்திருக்க முடியாது...!” என்று குசலம் விசாரித்துக் கதை சொன்னுள் தாரா. -

“அத்தான், தாராவின் கணவர். இவர். இவர் எனக்கு அத்தான் முறை வேணும். புதுமணத் தம்பதிகள் ரயிலுக்கு வந்திருக்கிறார்கள். ரயில் புறப்பட்டுவிட்ட அவசரத்தில் ஆளுக்கொரு பெட்டியில் ஏறிவிட்டார்களாம். உங்களிடம் சொல்ல மறந்திட்டேன். நேற்று இரவு அடித்த புயலிலும் மழையிலும், என் அத்தான் இல்லையென் ருல் கான் இக் கேரம் உங்களைக் காணும் பாக்கியம்கட்டச் செய்திருப் பேனே, என்னவோ? உங்களைப்போலவும் மூர்த்தி அத்தான் மாதிரியும் உலகத்திலே கல்லவங்க காலுபேர் இன்னம் கடமாடறதஞலேதான், ராத்திரி அடிச்ச பேய்க்காற்றும் மழையுங்கட்ட சீக்கிரம் ஓய்ஞ்சிடுச்சு?”

முகுந்தனின் உள்மனம் அணு அணுவாகச் செத்துக் கொண்டிருந்தது. ‘..தாரா! என்னை மன்னிக்க மாட்டாயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/43&oldid=684424" இலிருந்து மீள்விக்கப்பட்டது