பக்கம்:வேனில் விழா.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவிலே வாழ்வு

“ஆயா, வருசப் பிறப்புக்குத் தங்கச்சியையும் மச்சான யும் கம்ப வீட்டுக்கு அழைக்கணுமில்லே. அதுக்காக அவங்க ரெண்டுபேருக்கும் புதுவேட்டியும் சேலையும் எடுத் தாந்திருக்கேன்.”

“தம்பி, நானுந்தான் அப்பவே பிடிச்சு ரோசிச்சுக்கிட் டிருந்தேன். நல்லதாப் போச்க நீயே முந்திக்கிட்டது. பின்னே அவங்களையெல்லாம் சும்மாவா கடப்பிடறது. அதிலேயும் இந்த வருசந்தானே முதல் தேவை. ஆமா, அல்லாம் எம்பிட்டுப் பணமாவுது?’’

“இருபது ரூபாய் கிட்டக்க ஓடிருச்சு. இதுக்குக் குறைஞ்சு எடுத்தாக்க இந்தக் காலத்திலே துணி வகைப் படுமா? அதோடே இன்னிக்குத் தேங்காய் லாவாரம் கொஞ்சம் மவுசு. ஒரு மூச்சிலே அம்பிட்டும் முதலா யிடுச்சு-” என்று சொல்லி அத்துடன் பேச்சிற்கு முத்தாய்ப் பிட்டான் சின்னையா. தன் தாய் துணிமணிக்காக எங்கே அதிகம் செலவழித்துவிட்டதாகக் குறைப்படுவாளோ என்ற அச்சம் ஒருபுறம் லேசாக அவன் மனத்தைச் செல்லரித்தது. தைலம்மாதான் தற்சமயம் வீட்டுக்குப் பொறுப்பு. அவள் கணவன் இறந்தபிறகு குடும்ப கிர்வாகம் பூராவும் அவள் கண்காணிப்பிலும், கண்டிப்பிலுந்தான் முன்னேறியது. ஒட்டுவீட்டு மாசிமலைத் தேவன் வழி வமிச மென்றால் பின்னே சும்மாவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/45&oldid=684426" இலிருந்து மீள்விக்கப்பட்டது