பக்கம்:வேனில் விழா.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 45

தன் தங்கச்சி விஷயத்தில் பணம் செலவழிக்கச் சின்னயா ஒருபோதும் யோசிக்க மாட்டான். அதில் அவனுக்கு என்றும் தனித்த பெருமிதம் சுழித்தோடும், உடன்பிறந்த தங்கை-அவள் முகத்தில் என்றும் ஆனந்தம் மலருவதற்காக சின்னையா எதையும் தியாகம் செய்யச் சித்தமாயிருந்தான். தங்கையைப்பற்றி கினைத்த மாத்திரத் தில் அவள் மனத்தில் உற்சாகம் கிரம்பி வழியும். புது வருச்ப் பிறப்புக்கு தங்கையை அழைத்துவர எண்ணமிட்டான். சந்தைக்குப்போய்த் திரும்பிய களைப்பில் சாப்பிட்டு முடித்து வெற்றிலைப் போட்டுக்கொள்ள வாசலுக்கு வந்தான். அவனுடன் கையில் வெற்றிலக் கெர்ட்டர்ன் சகிதம் அவன் தாயும் வந்தாள். -

- விடிஞ்சதுமா மச்சான் கிட்டப் (3urii; சொல்லிப் புது வருசப் பிறப்புக்கு வரச் சொல்லிப்பிடுறேன், ஆயா.” -

“ஆமா தம்பி. அப்பத்தான் மாப்பிள்ளைக்கும் புறப்பட லாயக்குப்படும். அவங்க பல சோலிக்காரங்க பரிரு ; இல்லியா?”

அவள் பேச்சைத் துண்டித்ததுதான் தாமதம். அதே கணம் ஆயா” என்ற குரல் கேட்டது. ஏக காலத்தில் சின்னேயாவும் அவன் ஆயாளும் பின் திரும்பினுர்கள். சிறு குழந்தையின் கிலேயில் தன்னை உடந்தையாக்கிச் செருமிக் கொண்டிருந்தாள் வள்ளி. சின்னயா அழைப்பதற்குச் செல்லுவதற்குள் கண்ணிரே அவளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டது. சின்ன்ையாவின் இதயம் கெக்குவிட்டது.

‘தங்கச்சி, என்ன விசயம்? எதுக்கு இப்படித் தேம்பி அழுகிறே? மச்சான் வரலேயாங்காட்டியும்..” என்று கேட்டுக்கொண்டே வந்த சின்னையா டக்கென்று திகைத்துகின்றுவிட்டான். அந்தியில் கண்ட கிலவில் வள்ளி வின் சோம்பிய முகத்தில் கைவிரல்கள் ஐக்தும் ஆப்படியே தடிம்பதிந்து வீங்கியிருந்தது தெள்ளத் தெரிக்தது.

தைலம்மா உள்ளம் கடுங்கினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/46&oldid=684427" இலிருந்து மீள்விக்கப்பட்டது