பக்கம்:வேனில் விழா.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சர்விலே வாழ்வு

சின்னையா என்னவோ ஏதோவென்று பதறித் துடித் தான். -

‘இதெல்லாம் என்ன தங்கச்சி?”

“அதெல்லாம் அவரு-மச்சான் செஞ்ச அகியாயம்’ கண்ணுலம் கட்டி எண்ணி காலு மாசம் ஆகறதுக்குள்ளே அவருக்கு எம்மேலே வெறுப்பு வந்திடுச்சு. எல்லாம் காரிய மாத்தான். கண்டிச் சீமையிலேருந்து அது அக்கர மகள் வந்திருக்குதாம். அந்தக் குட்டி மேலே அவரு சண்னு: வைச்சுப்பிட்டாராம். பணக்காரங்களாம். என்னை விலக்கி வைச்சிட்டு அந்தப் பொண்ணைத்தான் பிறக்கிற மாசம் கண்ணுலம் கட்டிக்கப்போருராம். இனிமே நான் அந்த வீட்டுப் பக்கங்க.ட அடியெடுத்து வைக்கப்படாதுன்னு: அடிச்சுத் துரத்திட்டாரு” என்றாள் வள்ளி விம்மிய குரலில். அவள் மார்பகம் விம்மித் தாழ்ந்தது. அவளுடைய நயனச் செம்புகள் நீரைப் பெருக்கின.

சற்றுமுன் தாயும் மகனும் வள்ளியைப்பற்றி எவ்வளவு ஆசையாக கினைத்துத் திருவிழாவிற்கு மாப்பிள்ளையையும் மகளையும் வரவழைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனல் கடைசியில்...?

‘அடிச்சுத் துரத்திப்புட்டாளு? கன்னி கெட்ட பய. மகன். தங்கச்சி, கலங்காதே ஊர் மனுசங்கிட்டச்சொல்லி கியாயம் கேக்கலாம். மாரிப்பயல் வழிக்கு வந்தாத் தப்பிச் சான். இல்லாப்போன அவனை ஒரு கை பார்த்துக்கிறேன். பாவிப்பயல் ஒன்னைக் கைநீட்ட எப்படி மனசு வந்துச்சோ?” சின்னையா இப்படிப் பேசினன்.அவன் குர்லில், வார்த்தைப் பின்னணியில் சோளம் பொரிந்தது.

மாரி இப்படி நடந்துகொள்வான் என்று கிஞ்சித்தும்

எதிர்பார்த்தவனல்ல சின்னையா. தன் தங்கையின் கிலே அவனுக்கு ஆத்திரம் உண்டாக்கியது. -

மக்களச் சம்ாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாள் தைலம்மாள். அவள் கண்களில் கண்ணிர் பனித்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/47&oldid=684428" இலிருந்து மீள்விக்கப்பட்டது