பக்கம்:வேனில் விழா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 47

காலத் தேருக்கு ஹோல்டான்’ போட் யாருக்குத் திராணி உண்டு? நாட்கள் கடுகிப் பறந்தன. தன் சகோதரி வந்ததுதொட்டுச் சோம்பிய முகத்துடன் சதா காணப்பட்ட தைக் கவனித்த சின் னையா பெரிதும் வேதனைப்பட்டான். அவ்வூர் மணியக்காரர் வீட்டுக்கு கடையாக கடந்து அவர் மூலம் மாரியைச் சமாதானப்படுத்த முயற்சித்தான். எப்படியும் தன் தங்கை திரும்பவும் அவள் புருசனிடம் ராசியாகிவிட்டால்தான் கிம்மதிப்படுமென்று எண்ணம் அவனுக்கு. ஆனுல் அவன் ஆசை கிறைவேறவில்லை. வள்ளியைப்பற்றி இனிப் பேசிப் பயனில்லை என்பதாகக் கடறிவிட்ட மாரியின் முடிவைக் கண்டு அதிர்ந்து போய் விட்டான் சின்னேயா.

அன்று முழுதும், வள்ளி முகம் வீங்க அழுது தீர்த்தாள். தன் வாழ்க்கைச் சூரியன் இங்ஙனம் அஸ்த மித்துப் போகுமென்று அவள் எப்படி கினைத்திருக்கக் கட்டும்? ஆளுல் அந்த ஒருநாள்-காதல் வாழ்வின் தொடக் கத்திற்குச் செப்பனிட்ட புனித சம்பவத்தை வள்ளி,

என்றுமே மறக்கமாட்டாள்!

கிராமமே பரபரப்பாகக் காட்சியளித்தது. ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளோடு கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அன்று அம்மன்கோவில் கடைசித் திருவிழா. ஆகவே பலவித வேடிக்கைகளைப் பார்த்து மகிழு. வதற்கு ஜனங்கள் திரள் திரளாகக் கடியிருந்தார்கள். பலகாரக் கடைகளைச் சூழ்ந்து சிறுவர் கட்டம் மொய்த்து கின்றது. இளங் காதலர்கள் பரஸ்பரம் பட்சணங்கள் வாங்கிப் பரிமாறிக் கொண்டார்கள். அம்மன்கோவில் திருவிழாவிலே அழகு உலாப் பாடப்போவது போலச் சீவிச் சிங்காரித்துக்கொண்டு போனுள் வள்ளி. சுற்றுப் புறங்களைப் பொறுத்த மட்டில் அவள் எடுப்பான பெண் என்று பெயர். அந்தி மயக்கம் அவள் கண்களில்; அழகு மயக்கம் அவளது எழில் முகப்படுதாவில்; கனவு மயக்கம் புன்னகை கெளியும் இதழ் ஓரத்தில். ஆக அவ்ஸ் மயக்க உரு; அது வள்ளி! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/48&oldid=684429" இலிருந்து மீள்விக்கப்பட்டது