பக்கம்:வேனில் விழா.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சாவிலே வாழ்வு

‘பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒரு ஓரத்தில் கடந்து கொண்டிருந்தது. பெட்ரோமாக்ஸ்’ விளக்குப் புடை சூழ, தம்பட்டம் முழங்க, அழகாக ஆடிக்கொண்டிருந்த அந்த இளைஞனே இமைச்காமல் பார்த்து கின்றாள் வள்ளி. அதே போதில் தன்னையும் அந்த உருவம் விழுங்கிவிடுவது போன்று நோக்கியிருந்ததையும் அவள் கண்டுகொண்டாள். விழா முடிந்து வீட்டுக்குச் சென்ற அவள் இதயத்திலே அந்த வாட்ட சாட்டமான ஆண்பிள்ளே இடம் பெற்றான். விழாவிலே ஆட்டம் முடிந்துவிட்டது. ஆனல் வள்ளி தன் இதயத்திலே ஏதோ ஓர் ஆட்டம் ஆரம்பமாகியிருப்பதாக உணர்ந்தாள். -

அடுத்த நாள் குளித்து முழுகி மனே மிதித்தாள் வள்ளி. மிதித்த அந்த இமைப்போதில் அவள் செய விழந்தாள். காரணம்-தயக்கம்...! அன்று திருவிழாவில் கடை இளைஞனை வீட்டில் தரிசித்தாள். மாரியும் பார்த் தான். புைளுக்குலர்ஸ்’ கையாளும் விஞ்ஞானியைப்போல அவன் கண்கள் வள்ளியை எடை போட்டன. ஈரப் புடவை யுடன் நிறை அவளுக்கு வெட்கம் கிணற்றுைேர வெள்ளமா கொண்டுபோயிடும்’ என்று எண்ணமிட்டான் சின்னையா. -

வள்ளிக்கு மகிழ்ச்சி எல்லே தாண்டிற்று. ஏனென்றால் உள்ளத்தில் சிலையோடிருந்த பிம்பத்தை - பிம்புத்தின் உரிமையாளரை-மீளவும் கேரில் காணும் பாக்கியம் பெற்று. விட்டாளல்லவா? .

அடிக்கடி அவர்கள் இருவரும் தனிமையைத் துண்டித்து, ஒருவரையொருவர் கண்டார்கள். இன்மறியாத வட்கப் புன்னகை அவர்களது இதய அந்தரங்கததைத் தம்பட்டமடித்துக் கட்டியது. வள்ளி-மாரி இருவரிட்ையி லும் ஏற்பட்ட அன்பைக் கண்டு மறுமாதமே இருவரை யும் தம்பதிகளாக்கினுன் சின்னேயா, வள்ளி மாரிக்கு வாழ்க்கைப்பட்டதில் பூரித்துப் போனுள். ஊராரும் பெரு ம்ைப்படப் பேசிக்கொண்டார்கள். & T. . . . . . . . . . ;

ஆளுல் அதே மாரிதான இப்படித் தன்னை வேண்ட்ச வெறுப்புடன் உதறித் தள்ளுவது என்று எண்ணிப் பார்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/49&oldid=684430" இலிருந்து மீள்விக்கப்பட்டது