பக்கம்:வேனில் விழா.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 49

வள்ளிக்கு அழுகை பொங்கியது. கடைசியாக அன்றைக்கு அவளைப் பார்த்து அவன் கணவன் “வள்ளியாமில்லே வள்ளி; ஆளைப் பாரு மூஞ்சியிருக்கிற பவுசிலே அழுகை வேறேயாங்காட்டியும்.’’ என்று ஏளனம் பேசிய சம்பவ மும் கினைவில் எழுந்தது. உண்மைதான்; வள்ளி அப்போ தைய நிலையில் அழகுமங்கித்தான் இருந்தாள். முகத்தில் பூராவும் அம்மை வடுக்கள் கிறைந்திருந்தன். திருமண மான மூன்றாம் மாதம் அவளுக்கு அம்மை கண்டு ஆள் தேறியதே பெரும்பாடாகிவிட்டது முகத்தில் சிறு சிறு வடுக்கள் தோனறின. தகதகவென்று ஒளிவீசும் முகம் கருகிறத் தழும்புகளோடு அழகற்றுத் தோன்றியதுமதி முகத்திலே குறிப்பிடத் தகுந்த மாறுதல்-மனதில் வெறுப்பினையூட்டக்கூடிய அளவு படர்ந்திருந்தது. எந்த அழகு மாரியை ஆகர்ஷித்ததோ அது இப்போது அவளிடம் இல்லை. எனவே மாரியின் மனம் மாறியது. வள்ளியை வெறுத்தான். தற்சமயம் அவளிடம் அழகில்லை என்ப தற்கு வெறுத்தானென்றால் பிறகு மாரியும் மலருக்கு மலர் தாவித் திரியும் மது வண்டு மாதிரிதான ? இதே வள்ளி அன்று ஓர் கிராம மோகினியாகப் பரிணமித்தவளே

யல்லவா?

x:

அக்தி வானத்தில் விந்தைக் கோலங்கள் மலர்ந்தன. சிங்தையில் ஆயிரம் எண்ணங்கள் புரள, கரங்களிடைக் கன்னத்தைப் புதைத்தவாறு வீற்றிருந்தாள் வள்ளி. தன் மச்சானின் இரண்டாம் கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் கடப்பதாகக் கேள்விப்பட்டதிலிருந்து அவளது இதய வேதனை இரட்டித்துப் பெருகியது.

“தங்கச்சி, எதுக்குப் பிரமாதமாக் கவலைப்பட்டுக் குந்தியிருக்கே. நான் தீர முடிவு பண்ணி ரோசிச்சிட்டேன். கம்ப சாதி வழக்கப்படி உனக்கு இரண்டாம் கண்ணுலம் கட்டத் தீர்மானிச்சிருக்கேன். மாப்பிள்ளை கம்ப மாங்குடி மாமன் மகன். அப்பத்தான் மாரிக்கும் சொரணை வரும் ஆமா, வள்ளி” என்றான் சின்னையர். அவர்கள் ஜாதிக் கட்டுப்பாடு அத்தகையதொரு உரிமைக்கு-புதுவாழ்விற்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/50&oldid=684432" இலிருந்து மீள்விக்கப்பட்டது