பக்கம்:வேனில் விழா.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 5

தன் கணவன் வீட்டை நோக்கி வழி கடந்தாள்-ஓடினுள் போட்டியிட்ட மனப் புயலுடன். மச்சானுக்கு யாதொரு, குறையும் ஏற்படாதிருக்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டாள். வள்ளியின் மனம் படபடவென்று அடித்துக் கொண்டது. ஐந்து விரல்கள் அழுந்திப் பதியத் தன் கன்னத்தைச் சுவைபார்த்த மாரியை அவள் கினைக்கவும் துணியவில்லை. ஆளுல் இனிய மொழிபேசும் மாரி செல்ல மாகத் தன் கன்னங்களைத் தட்டியதைத்தான் மீண்டும் கினைவுகூர்ந்தாள். இப்போது அவள் மனம் மாரிக்கு என்ன கேர்ந்ததோ என்று துணுக்குற்றது. வேகமாக ஓடினுள்.

பிணம் போலத் தரையில் கிடத்தப்பட்டிருந்த மாரி யைக் கண்ணுற்ற வள்ளிக்கு உலகமே சுழன்றது. “மச்சான்’ என்று கூவியழைத்து அலறிஞள். வள்ளியைத் திரும்பவும் அவ்வீட்டில் கண்ட உறவினர்கள் அவளது. உயர்ந்த போக்கைக் கண்டு வியந்தார்கள். . . . . .

தன் மனைவியைப் பார்த்ததும் மாரி கண்ணிருகுத்த வண்ணம், வள்ளி, கான் மகாபாவி, நீயே என் வீடு தேடி வந்துட்டியா? ஆமா, பூமியாட்டம் பொறுத்திருந்த ஒனக்குத் தீங்கு பண்ண கெனச்சிருக்ததுக்கு இந்தத் தண்டனை போதும். கான் இனிப் பிழைக்கமாட்டேன். என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்க. அப்பத்தான் என் உடம்பு வேகும்...” என்றான் மாரி.

மேலே அவனால் பேச முடியவில்லை. அதுவே அவன் இறுதிப் பேச்சாகவும் அமைந்தது. அழுது புரண்டாள் வள்ளி. அந்த வீட்டில் அப்புறம் ஒரு நிமிஷம்கூடத. தாமதிக்காமல் அதே இரவில் தாய் வீடு திரும்பினுள்.

  வள்ளியைக் கண்டதும்தான் தைலம்மாவிற்கு உயிர் வந்தது. மாங்குடியிலே பரிசம்போட்டு முகடர்த்தத்திற்குத் தேதி வைத்திருக்கும் சேதியைத் தங்கச்சியிடம் கறத் துடித்தான் சின்னையா. அதே சமயத்தில், ‘அண்ணுச்சி அவரு-எம் புருசன் செத்துப் போயிட்டாரு. யாரோ பாவிப் பயலுங்க அவரை அடிச்சுக் கொன்னுட்டாங்க. அங்கே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/52&oldid=684434" இலிருந்து மீள்விக்கப்பட்டது