பக்கம்:வேனில் விழா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஆடும் குதிரை

ஒன்றைத் தேடுபவன் மாதிரி அவன் விசையாக கடந்தான், பொம்மைக் குதிரையில் அவனுடைய தளர்ந்த விரல்கள் இழைந்திருந்தன.

“பொம்மைக் குதிரை வேனுமா, பொம்மைக் குதிரை!” என்று கடவாவிட்டால், எப்படி அவனுக்கு அதைப் பண மாக்க முடியும்? ஊமைபோல கடந்தான்.

‘ஏ பொம்மைக் குதிரை!” அழைப்பு வந்தது. கனவுகண்டு விழிப்பவன் போன்று அவன் கண்களை உருட்டி விழித்தான். குரல் மிதந்த பாதைக்குப் பார்வையை அணை போட்டான்.

‘குதிரை என்ன விலையப்பா?’ என்று யாரோ ஒரு பெண் கேட்டாள். -

கிழவன் அவளே ஒருமுறை நோக்கினன். நிறைமாதக் கர்ப்பிணி அவள். உள்ளம் எதிர்பார்த்த ஒவியத்திற்கென்று, அவள் கண்களில்தான் எத்தனை கனவுகள்!

“பொம்மைக் குதிரை வேணுங்களா அம்மா?” ஆமாம்; விலை?” “விலை கிடக்கட்டும், அம்மா. தங்கச்சிக்கு இதுதான் தலைப்பிரசவம் போலே...’

‘உம்’ என்று சொல்லி அவள் பெருமூச்சுவிட்டாள். *அது சரி, பணம் எத்தன வேண்டும்?” தேங்கச்சி, குதிரையை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குழந்தையும் கையுமாக இருப்பீர்கள் பாருங்கள், அப்போது வந்து நீங்கள் இஷ்டப்பட்டுத் தருகிறதைத் திருப்தியோடு வாங்கிக்கொள்கிறேன். ஏழுமலையான்தான் உங்களுக்கு நல்ல வழிகாட்டித் தாயும் பிள்ளையுமாக உங்களை கூேடிமமாய் வைக்கவேண்டும்.’’

கூடத்தில் பொம்மைக் குதிரையை வைத்தான்; மாயாண்டிக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது; திரும்பினுன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/55&oldid=684437" இலிருந்து மீள்விக்கப்பட்டது