பக்கம்:வேனில் விழா.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 55

கிழவனே நிமிர்ந்து பார்த்தாள் அந்தப் பெண் ஜானகி. அவளுடைய அழகிய உதட்டோரத்தில் அழகான சிரிப்பு இாந்தது. “தாத்தா, நிஜமாகவே உன் வாக்குப் பலித்து விடுமா? ஆஹா! சரி, அடுத்த வாரம் வா. என் கனவு பலித்துவிட்டால் நீ கேட்கும் பணம் தருகிறேன்” என்றாள். உணர்ச்சி புரண்டது. கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

விடை பெற்றுக்கொண்டு கடந்தான் கிழவன் மாயாண்டி. கண்ணிர் வழிந்தோடியது.

‘நல்ல பொம்மைக்கார வியாபாரி!” ஜானகியின் கெஞ்சில் கிழவனின் உருவமும் ஆடும் குதிரையும் மாறி மாறிச் சுழன்றுகொண்டிருந்தன.

‘யாரோ ஒரு கிழவன் வந்து கொடுத்தான். விலை கேட்டால், எனக்கு கல்ல வழி பிறந்ததும் வந்து பணம் வாங்கிக்கொள்வதாகச் சொல்லிப் போய்விட்டான்” என்று தோழி கமலாவிடம் சொன்னுள்.

“ஓகோ, மாயாண்டிக் கிழவனு? பாவம்! தங்கமான வன். நானும் அவனைப்பற்றிப் பலபேர் பல இடங்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவனுக்குக் குழந்தை என்றால் ஒரே பாசம். மாதத்துக்கு ஒன்று இரண்டு என்று செய்து விற்று வயிறுவளர்க்கிருன் போலிருக்கிறது. உம், என்னவோ, அந்தக் கிழவன் கைராசியாலே உனக்கு இந்தத் தடவையாகிலும் தெய்வம் நல்லவழி காட்டவேண் டும். நாலு தடவை உனக்கு ஆசைகாட்டி, காலு தடவை யும் குழந்தையைப் பறித்துக்கொண்ட அந்தக் கடவுள் இந்த ஐந்தாவது தரமாவது கருணை காட்டவேண்டும்.”

‘இந்த ஐந்தாவது தவணை எனக்கு வழிபிறந்தால் தான் நான் உயிர் தரிப்பேன், கமலா. கடவுளே வந்து இப்படிப் பொம்மைக் குதிரையைத் தந்துவிட்டுச் செல்கிற மாதிரி எனக்கு ஓர் இன்ப உணர்ச்சி ஓடுகிறது” என்று கண்ணிர் வடித்தாள் ஜானகி.

 *

அன்று அமளி துமளிப்பட்டது, அதே வீட்டில். ஏழெட்டுப் பேர்கள் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். கார் ஒன்று வந்தது. லேடி டாக்டர் வந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/56&oldid=684438" இலிருந்து மீள்விக்கப்பட்டது