பக்கம்:வேனில் விழா.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஆடும் குதிரை

ஜானகிக்குப் பிரசவ வேதனை மிகுந்திருந்தது. அவள் கணவன் சேகரன் துாண்டில் புழுவாகத் துடித்தான். “தெய்வமே, இந்த ஜக்தாவது முறையாகிலும் எங்கள் இருவர் வயிறுகளிலும் பால் வார்ப்பாயா?” என்று பூஜை யறையில் ஆண்டவனிடம் கண்ணிரும் கம்பலையுமாக வேண்டிக்கொண்டு வெளியே திரும்பிஞன்.

கூடத்தில் இருந்த அந்த ஆடும் குதிரை ஆவனுக்கு கல்ல சுட சூசனபோலப் பட்டது. வீடு தேடிவந்த குதிரைப் பொம்மையின் கதையை கினைத்துக்கொண்டான்.

உள்ளே வேதனை தாளாமல் அலறும் குரல் எதி: ரொலித்து மிதந்தது. தெய்வமே!’ என்று புலம்பிக். கொண்டிருந்தான் சேகரன்.

லேடி டாக்டருக்காகக் காத்திருந்தான் அவன். அரவம் கேட்டது. துடிக்கும் உள்ளத்துடன் திரும்பிஞன். மறு: கணம் ‘ஆ’ என்று அலறிஞன். அப்பொழுது கூடத்தி லிருந்த ஆடும் குதிரையைத் தூக்கிக்கொண்டு பழைய கிழவன் ஓட முயனறுகொண்டிருந்தான். நெஞ்சு நெருப் பாகத் தகித்தது சேகரனுக்கு. “இந்தப் பொம்மைக் குதிரை ஒருகல்ல. ஆசனை. இந்த முறை கல்லபடியாகக் குழந்தை. பிறந்து சுபமாக இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு முன் எச்சரிக்கைபோல என்று ஆசையுடன் நினைத்துக்கொண் டிருந்தேனே. கடைசியில் அதே குதிரைப் பொம்மையைத். திருட வந்திருக்கிருனே!’ என்று குமுறிஞன்.

கைநொடிப்பொழுதில், கிழவன் மாயாண்டி, சேகரனின் விடியில் கின்றான்.

‘ஐயா, இது என் குதிரை. கான் தான் கொடுத்தேன் ’’’ என்று தழுதழுக்கக் கூறினன் மாயாண்டி. - - - - - - - -

வேஷமா போடுகிறாய்? பணமில்லாமல் பொம்மைக். குதிரையைக் கொடுத்துவிட்டுக் கடைசியில் அகப்பட்ட தைச் சுருட்டிக்கொண்டு போவதற்கா வந்தாய், திருட்டுப் பயலே’ என்று ஆத்திரத்தில் கிழவனின் கன்னத்தில் அறைந்தான் சேகரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/57&oldid=684439" இலிருந்து மீள்விக்கப்பட்டது