பக்கம்:வேனில் விழா.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ்.ஆறுமுகம் 57

ஆடும் குதிரையையே இமைக்காமல் பார்த்துக் கானடு கிழவன் மாயாண்டி கண்ணிர் மாலை மாலையாகப் புரண்டோடச் சிலையாக கின்றுகொண்டிருந்தான்.

சேகரனுக்குத் தன் மீனவு வந்தது. உள்ளே கசமுச’ வென்று சத்தம் கேட்டது. நகர்ந்தான்.

“சேகரன், ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!’ என்ற நல்ல சேதி வந்தது.

சேகரன் ஆன்ந்தமயமான கனவு உலகில் பறந்து கொண்டிருந்தான்.

“ஆகா, ஏழுமலையான் என் கவலையைத் தீர்த்து, கல்ல வழிகாட்டிவிட்டான். ஐயா! என் ஆடும் குதிரை இங்கேயே இனி இருக்கட்டும். உங்கள் மனவியிட ம் சொல்லுங்கள். இந்தக் குதிரை இந்த ஏழை மாயாண்டியினுடைய அன்புப் பரிசு. நான் போய் வருகிறேன்’ எனறு கூறிய கிழவன் புறப்பட்டான்.

தேடிவந்த தெய்வம் போன்று வந்த அந்த ஆடும் குதிரை, அந்த வீட்டில் இன்ப விளக்கேற்றி வைத்திருப் பதைக் கண்டு சேகரன் ஆனந்தப்பட்டான். அதேசமயம, விடை கூறிப் புறப்பட்ட கிழவனின் வார்த்தைகளும் போக் கும் புதிர்மாதிரிப் பட்டன அவனுக்கு.

அழைத்தான்.

‘ஏய் கிழவா! நிஜமாக நீயேதானு என் மனைவியிடம் போன வாரம் இந்த ஆடும் குதிரைப் பொம்மையைக் கொடுத்துப் போனுய்?’

“ஆமாமுங்க.” -

“குதிரைக்குள்ள கிரயத்தைத்தான் நாங்கள் கொடுத்து

விடுவோமே; பிறகு, ஏன் அப்படித் திருடன் மாதிரி வந்து அதை எடுத்துப்போகப் பிரயத்தனப்பட்டாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/58&oldid=684440" இலிருந்து மீள்விக்கப்பட்டது