பக்கம்:வேனில் விழா.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆடும்:குதிரை

‘எசமான், அதுதான் விடுகதை, அன்றைக்கு இந்தப் பொம்மையை அம்மாவிடம் கொடுத்தபோது, தலைப் பிரசவமா என்று கேட்டேன். அவர்கள் ஆமாம் என்கிற மாதிரித் தலையாட்டினர்கள். குழங்தை பிறந்ததும் பணம் வாங்கிக்கொள்வதாகச் சொல்லிப் பிரிந்தேன். ஆளுல் கான் சங்து திரும்புகிறபோது, போன நாலு தடவையும் குழந்தை பிறந்து தவறிப்போய்விட்டது என்கிற செய்தி யைக் கேட்டேன். இந்த ஐந்த வது தடவையாவது நான் பொம்மைக் குதிரை கொடுத்த கைராசியைக்கொண்டு அம்மாவுக்கு கல்லவழி பிறக்கவேண்டும் என்று ஒரு புது அம்மா வாழ்த்தினர்கள். அப்போதுதான் எனக்குப் பித்துப் பிடித்தமாதிரிப் போய்விட்டது. ஐயா, அந்தக் காலத் திலே இதேமாதிரிதான் என் மனைவிக்கும் காலு தடவை கருத் தரித்து, நாலு தடவையும் குழந்தை தங்கவில்லை. அதே ஏக்கத்தில் என் மனைவியும் கண்ணே மூடிவிட்டாள். கானும் இப்படி அரைப் பைத்தியம் மாதிரி ஊரெல்லாம் அலைந்து திரிகிறேன். பணம் வாங்காமல் வலியக் கொடுத் துப்போன குதிரையை நான் எதுக்கு இப்படித் திருடன் மாதிரி எடுத்துப்போக வேண்டும் என்று யோசிக்கிறீர் களா? தங்கச்சிக்கு - உங்கள் மனைவிக்கு - நல்ல வழி பிறக்க வேண்டும் என்று நான் வேணடிக்கொள்ளாத தெய்வம் இல்லை. கொஞ்சம் முக்தி வந்தபோது வீட்டிலே ஒரே அமளி குமளிப்பட்டது. கான் உங்கள் வீட்டிலே பொம்மைக் குதிரையை வைத்ததல்ை என்னைப் பிடித்திருக் கும் அந்தப் புத்திரதோஷம் ஒருவேளை இங்கேயும் பிடித்து விட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்திலேதான் அப்படிச் செய்தேன். ஐயா! என் அச்சமும் வேதனையும் ஆலாய்ப் பறந்துவிட்டன. கடவுள் இப்போதுதான் என் வேண்டுதலுக்கு இரங்கியிருக்கிறார், குழந்தை நீடுழி வாழ ஏழுமலையான் அருள் புரியவேண்டும்’ என்று சொல்லி விட்டு விர்’ரென்று கடந்தான் கிழவன்.

‘மாயாண்டி, மாயாண்டி!’ என்று அவனிடம் மன்னிப் புக் கேட்கத் தொடர்ந்தான் சேகரன்.

அப்போது உள்ளிருந்துவந்த சிறுமி ஒரு செய்தி சொன் குள்: சேகர் அண்ணு, ஜானகி அண்ணி சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேனில்_விழா.pdf/59&oldid=684441" இலிருந்து மீள்விக்கப்பட்டது